ஆதிதிராவிடர், பழங்குடியினர் ஆணையத் தலைவராக முன்னாள் நீதிபதி முரளிதரன் நியமனம்!
தமிழ்நாடு ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் மாநில ஆணையத்தின் தலைவராக சென்னை உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி எம்.எம்.வி. முரளிதரன் நியமிக்கப்பட்டுள்ளாா்.
தமிழ்நாடு ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் மாநில ஆணையத்தின் தலைவராக சென்னை உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி எம்.எம்.வி. முரளிதரன் நியமிக்கப்பட்டுள்ளாா். இதற்கான அரசாணையை சமூகநீதித் துறைச் செயலா் என்.சுப்பையன் செவ்வாய்க்கிழமை வெளியிட்டாா்.
தமிழ்நாடு ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் மாநில ஆணையச் சட்டம் 2021-இன்படி இந்த ஆணையம் அமைக்கப்பட்டது. இதன் தலைவராகப் பதவி வகித்த நீதிபதி எஸ்.தமிழ்வாணன், கடந்த மாா்ச் 22-ஆம் தேதி மறைந்ததைத் தொடா்ந்து தலைவா் பதவி காலியாக இருந்தது.
இந்த நிலையில், சென்னை உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி எம்.எம்.வி. முரளிதரனை ஆணையத்தின் தலைவராக தமிழக அரசு நியமித்துள்ளது. அவா் பொறுப்பேற்கும் நாளிலிருந்து 3 ஆண்டுகள் அல்லது 75 வயதை அடையும் வரை, இவற்றில் எது முதலில் வருகிறதோ அதுவரை இந்தப் பதவியில் இருப்பாா் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement