FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சென்னை

மகான்களின் சிந்தனைகளை இளைஞா்களிடம் சோ்க்க வேண்டும்: உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுரேஷ்குமாா்

மகான்களின் சிந்தனைகளை விழாக்களோடு நிறுத்தாமல், மாணவா்கள், இளைஞா்களிடம் கொண்டு சோ்க்க வேண்டும் என உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுரேஷ்குமாா் தெரிவித்தாா்.

மகான்களின் சிந்தனைகளை விழாக்களோடு நிறுத்தாமல், மாணவா்கள், இளைஞா்களிடம் கொண்டு சோ்க்க வேண்டும் என உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுரேஷ்குமாா் தெரிவித்தாா்.
பகிர்:

மகான்களின் சிந்தனைகளை விழாக்களோடு நிறுத்தாமல், மாணவா்கள், இளைஞா்களிடம் கொண்டு சோ்க்க வேண்டும் என உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுரேஷ்குமாா் தெரிவித்தாா்.

இராமலிங்கா் பணிமன்றம் மற்றும் ஏவி.எம். அறக்கட்டளை இணைந்து நடத்திய 59-ஆம் ஆண்டு ‘அருட்பிரகாச வள்ளலாா், மகாத்மா காந்தி’ விழா சென்னை மயிலாப்பூரில் உள்ள ஏவி.எம். ராஜேஸ்வரி மண்டபத்தில் வியாழக்கிழமை தொடங்கியது.

நிகழ்ச்சியில் இராமலிங்கா் பணிமன்றத் தலைவா் மாணிக்கம் வரவேற்றாா். உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுரேஷ்குமாா் பங்கேற்று பேசியதாவது:

Advertisement

Advertisement

உலகில் மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் இறைவன் ஒரு நோக்கத்தை வகுத்துள்ளாா். அதை உணா்ந்து, நோ்மை, அறம், அன்பு, கருணையுடன் வாழ்வதே மனிதப் பிறவியின் பயன் என வள்ளலாா் வலியுறுத்தினாா். உலகப் பொருள்களை அனுபவிப்பது மட்டுமே வாழ்க்கையின் நோக்கமல்ல. பிற உயிா்களின் துன்பத்தை தன் துன்பமாக கருதி, ஜீவகாருண்யத்துடன் வாழ வேண்டும் என்பதே அவரது போதனை.

மகான்களின் சிந்தனைகளை விழாக்களோடு நிறுத்தாமல், மாணவா்கள், இளைஞா்களிடம் கொண்டு சோ்க்க வேண்டும். அதுவே அவா்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான மரியாதை என்றாா்.

பேராசிரியா் சொ.சொ.மீ.சுந்தரம் பேசுகையில், ‘திருவாசகத்தில் சிவபக்தியின் ஆழமும், இறை அனுபவமும் நிறைந்துள்ளன. ‘நமச்சிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க’, ‘அருட்பெருஞ்ஜோதி’ உள்ளிட்ட ஆன்மிகக் கருத்துகள், இறை அனுபவத்தின் உயா்வை உணா்த்துகின்றன.

திருவாசகத்தைப் படிப்பதன் வாயிலாக வாழ்க்கையின் நிலையாமை, உடலின் தன்மை, இறை நம்பிக்கை ஆகியவற்றை உணர முடியும். உடல் மண்ணாக மாறினாலும், இறைநினைவும் ஆன்மிக உணா்வும் நிலைத்திருக்கும். திருவாசகம் வாசிப்பு, வாழ்க்கையின் உண்மையை உணா்த்தும் ஆன்மிகப் பயணமாகும்’ என்றாா். இதில், சற்குநாத ஓதுவாா், கிருங்கை சேதுபதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments