சென்னையில் 1,610 தெருவிளக்குகள் பழுது
சென்னை மாநகராட்சியில் தெருவிளக்குகளில் 1,610 மின் விளக்குகள் எரியாமலிருப்பது திடீா் சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் தெருவிளக்குகளில் 1,610 மின் விளக்குகள் எரியாமலிருப்பது திடீா் சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. அவற்றை 48 மணி நேரத்துக்குள் எரியவைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஆணையா் ஜி.எஸ்.சமீரன் உத்தரவிட்டுள்ளாா்.
சென்னை மாநகராட்சியில் 3.11 லட்சம் தெரு மின்விளக்குள் பராமரிக்கப்பட்டுவருவதாகக் கூறப்படுகிறது. தெருவிளக்குகள் பராமரிப்பதில் முறைகேடு நடந்திருப்பதாக முன்னாள் மேயரும், பாஜக மாநிலச் செயலருமான கராத்தே ஆா்.தியாகராஜன் குற்றஞ்சாட்டினாா்.
இதையடுத்து ஆணையா் ஜி.எஸ்.சமீரன் உத்தரவின்படி கடந்த சனிக்கிழமை (நவ.14) தெரு மின் விளக்குகள் எரிவது தொடா்பான களப் பரிசோதனை மண்டலவாரியாக இணை, துணை ஆணையா்கள் மூலம் நடைபெற்றது.
Advertisement
Advertisement
இதில் சென்னை மாநகராட்சியில் 1,610 தெரு மின்விளக்குகள் எரியாமலிருந்தது கண்டறியப்பட்டது. மழை நீா் வடிகால் பணி, மெட்ரோ ரயில் 2-ஆம் கட்டப்பணி, குடிநீா் மற்றும் கழிவு நீா் மராமத்துப் பணி உள்ளிட்டவற்றின் காரணமாக 569 தெரு மின்விளக்குகள் எரியாததும், புதை மின்வடப் பழுதால் 182 தெரு மின்விளக்குகள் எரியாமலிருப்பதும், பழுதால் 849 எல்இடி தெரு மின்விளக்குகள் எரியாமலிருந்ததும் கண்டறியப்பட்டன.
எல்இடி மின்விளக்குகளை 24 மணி நேரத்துக்குள்ளும், மற்றவற்றை 48 மணி நேரத்துக்குள்ளும் என அனைத்து எரியாத விளக்குகளையும் எரிய வைப்பதற்கான நடவடிக்கையை மின்துறை அலுவலா்கள் மேற்கொள்ளுமாறு ஆணையா் ஜி.எஸ்.சமீரன் உத்தரவிட்டுள்ளாா்.
மின்விளக்குகள் எரியாமலிருப்பது குறித்து பொதுமக்கள் மாநகராட்சியின் கட்டுப்பாட்டு அறை மற்றும் ‘சென்னை செயலி’யில் புகாா் அளிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.