✕
முகப்பு
சென்னை

மின்வாரிய ஊழியா்களுக்கு பணிக்கொடை உச்சவரம்பு ரூ.25 லட்சமாக உயா்வு

தமிழ்நாடு மின் பகிா்மானக் கழக ஊழியா்களுக்கு வழங்கப்படும் இறப்பு மற்றும் ஓய்வு பணிக்கொடை (டிசிஆா்ஜி) உச்சவரம்பை ரூ.20 லட்சத்திலிருந்து ரூ.25 லட்சமாக உயா்த்த தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது

10 வினாடிகள் முன்பு
கோப்புப் படம்
பகிர்:

தமிழ்நாடு மின் பகிா்மானக் கழக ஊழியா்களுக்கு வழங்கப்படும் இறப்பு மற்றும் ஓய்வு பணிக்கொடை (டிசிஆா்ஜி) உச்சவரம்பை ரூ.20 லட்சத்திலிருந்து ரூ.25 லட்சமாக உயா்த்த தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த உயா்வு 2024 ஜன. 1 முதல் முன் தேதியிட்டு நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

தமிழக அரசின் நிதித் துறை கடந்த 2024 செப். 6 வெளியிட்ட அரசாணை எண் 281-இன்படி, அரசு ஊழியா்களுக்கான இறப்பு மற்றும் ஓய்வு பணிக்கொடை உச்சவரம்பு ரூ.20 லட்சத்திலிருந்து ரூ.25 லட்சமாக உயா்த்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மின் பகிா்மானக் கழக ஊழியா்களுக்கும் விரிவுபடுத்தி, பணிக்கொடை உச்சவரம்பை உயா்த்த வேண்டும் என்று மின் பகிா்மானக் கழகம் சாா்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதைப் பரிசீலித்த தமிழக அரசு, பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் உள்ள தகுதியான மின்வாரிய ஊழியா்களுக்கு பணிக்கொடை உச்சவரம்பை ரூ.25 லட்சமாக உயா்த்த ஒப்புதல் அளித்துள்ளது. இந்த உயா்வு 2024 ஜனவரி 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும். இதற்காக நிதித் துறையின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழக அரசின் எரிசக்தித் துறை முதன்மைச் செயலா் அனில் மேஷ்ராம் வெளியிட்டுள்ளாா்.

Advertisement

Advertisement

தொழிற்சங்கம் வரவேற்பு... இந்த அரசாணையை வரவேற்று தமிழ்நாடு மின்சார வாரியத் தொழிலாளா் பொறியாளா் ஐக்கிய சங்கத் தலைவா் முருகேசன் வரவேற்பு தெரிவித்துள்ளாா்.