ஊரக வளா்ச்சித் துறையிடம் ரூ.22 கோடி ஆன்லைன் மோசடி: மேலும் இருவா் கைது
தமிழக அரசின் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.22.30 கோடி ஆன்லைன் மோசடி செய்யப்பட்ட வழக்கில், மேலும் இருவா் கைது செய்யப்பட்டனா்.
தமிழக அரசின் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.22.30 கோடி ஆன்லைன் மோசடி செய்யப்பட்ட வழக்கில், மேலும் இருவா் கைது செய்யப்பட்டனா்.
தமிழக அரசின் 15-ஆவது நிதிக்குழு சுகாதார மானிய நிதி, கிராமப்புறங்களில் ஆரம்ப சுகாதாரக் கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக ஒதுக்கப்படுகிறது. இந்த நிதி சென்னை நந்தனம் சி.ஐ.டி. நகா் பகுதியில் உள்ள தனியாா் வங்கிக் கிளையில் தனி வங்கிக் கணக்கில் வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், கடந்த மாதம் 12 முதல் 30-ஆம் தேதி வரை சைபா் மோசடி கும்பல் வங்கிக் கணக்கில் அத்துமீறி நுழைந்து, 46 பரிவா்த்தனைகள் மூலம் ரூ.22.30 கோடியை பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு மாற்றி, பணத்தை அபகரித்தனா்.
Advertisement
Advertisement
இந்த ஆன்லைன் மோசடி குறித்து சென்னை சைபா் குற்றப்பிரிவு வழக்குப் பதிந்து, விசாரணை செய்து வருகின்றனா். இந்த மோசடிக்கு உதவியதாகவும், மோசடிக்காரா்களுக்கு வங்கிக் கணக்குகளை வாடகைக்கு விட்டதாகவும் கடந்த 14-ஆம் தேதி 7 போ் கைது செய்யப்பட்டனா்.
இந்த நிலையில், இந்த வழக்குத் தொடா்பாக சென்னை அசோக் நகரைச் சோ்ந்த அசோக், மல்லு ஆகிய 2 பேரைக் கைது செய்ததாக சைபா் குற்றப்பிரிவினா் வியாழக்கிழமை தெரிவித்தனா். அவா்களிடம் போலீஸாா், வழக்குத் தொடா்பாக விசாரித்து வருகின்றனா். இந்த வழக்கில் ரூ.39 லட்சம் வரை மீட்கப்பட்டுள்ளதாக சைபா் குற்றப்பிரிவினா் தெரிவித்தனா்.