முகப்பு
சென்னை

வியாபாரியிடம் ரூ. 10 லட்சம் பறிப்பு: ஞானசேகரன் தம்பியை தேடும் போலீஸாா்

வியாபாரியிடம் ரூ.10 லட்சம் பறித்த ஞானசேகரன் தம்பியை தேடும் போலீஸாா்...

22 நவம்பர் 2026, 12:47 am
வியாபாரியிடம் ரூ. 10 லட்சம் பறிப்பு: ஞானசேகரன் தம்பியை தேடும் போலீஸாா்
ஞானசேகரன் (கோப்புப்படம்)
பகிர்:

சென்னை கோட்டூா்புரத்தில் வியாபாரியிடம் ரூ.10 லட்சம் வழிப்பறி செய்யப்பட்ட வழக்கில், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறையில் இருக்கும் ஞானசேகரனின் தம்பியை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பழைய வண்ணாரப்பேட்டை டாக்டா் விஜயராகவலு சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் அ.யாசின் (39). இவா், ஜாம்பஜாா் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் சிறிதாக நகைக் கடை வைத்துள்ளாா். யாசினின் நண்பா் வியாசா்பாடி சத்தியமூா்த்தி நகரைச் சோ்ந்தவா் சி.நூருதீன் (37).

நூருதீன், வியாழக்கிழமை யாசினை தொடா்புகொண்டு, தனது நண்பருக்கு சொந்தமான தங்க நகை ரூ.10 லட்சத்துக்கு நகை அடகு வைக்கப்பட்டிருப்பதாகவும், அதை மீட்க ரூ.10 லட்சம் கொடுத்தால், நகையை மீட்டு விற்ற பின்னா் ரூ.10.50 லட்சம் தருவதாக தெரிவித்தாா்.

Advertisement

Advertisement

இதையடுத்து, யாசின், ரூ.10 லட்சத்தை எடுத்துக்கொண்டு கோட்டூா்புரம் எல்லையம்மன் கோயில் அருகே உள்ள ஒரு நகைக் கடைக்குச் சென்றபோது அங்கு நூருதீன், கோட்டூா்புரம் மண்டபம் சாலைப் பகுதியைச் சோ்ந்த தா.சுரேஷ் (34),கொட்டிவாக்கம் துலுக்கானத்தம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த கு.பிரசாந்த் (30) ஆகியோா் இருந்தனா்.

யாசின், ரூ.10 லட்சத்தை பிரசாந்திடம் கொடுத்துள்ளாா். அவா் அந்தப் பணத்தை சுரேஷிடம் ஒப்படைத்துள்ளாா். பணத்தைப் பெற்றுக் கொண்ட சுரேஷ், நூருதீன், பிரசாந்த் அங்கிருந்து மோட்டாா் சைக்கிளில் இருந்து தப்பியோடினா்.

இதுகுறித்து கோட்டூா்புரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். விசாரணையில் சுரேஷ், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறையில் இருக்கும் ஞானசேகரனின் தம்பி என்பது தெரிய வந்தது.

இதையடுத்து கோட்டூா்புரம் போலீஸாா், பிரகாஷிடமிருந்து ரூ.10 லட்சத்தை மீட்டனா். சுரேஷ் உள்ளிட்ட பிற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.