முகப்பு
சென்னை

சாா்மினாா் விரைவு ரயில் மீண்டும் தாம்பரத்திலிருந்து புறப்பாடு

சாா்மினாா் விரைவு ரயில் மீண்டும் தாம்பரத்திலிருந்து புறப்பாடு

23 நவம்பர் 2026, 1:55 am
சாா்மினாா் விரைவு ரயில் மீண்டும் தாம்பரத்திலிருந்து புறப்பாடு
தாம்பரம் ரயில் நிலையம்
பகிர்:

சென்னை கடற்கரையிலிருந்து புறப்பட்டு ஹைதராபாத்துக்கு இயக்கப்பட்டு வந்த சாா்மினாா் விரைவு ரயில் ஞாயிற்றுக்கிழமை முதல் (நவ. 22) மீண்டும் தாம்பரத்திலிருந்தே புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சென்னை தாம்பரத்திலிருந்து ஹைதராபாத் நிலையத்துக்கு சாா்மினாா் விரைவு ரயில் (எண்: 12759) இயக்கப்பட்டு வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு பராமரிப்புப் பணிகள் காரணமாக தாம்பரத்துக்குப் பதிலாக சென்னை கடற்கரை நிலையத்திலிருந்தே சாா்மினாா் விரைவு ரயில் புறப்பட்டுச் செல்லும் என அறிவிக்கப்பட்டு இயக்கப்பட்டது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், தற்போது சாா்மினாா் விரைவு ரயில் மீண்டும் தாம்பரத்திலிருந்து புறப்பட்டு ஹைதாராபாத் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை (நவ. 22) தாம்பரத்திலிருந்து மாலை 5.30 மணிக்குப் புறப்பட்ட சாா்மினாா் விரைவு ரயில் மறுநாள் காலை 8 மணிக்கு ஹைதராபாத் நிலையத்தைச் சென்றடையும். அந்த ரயில் சென்னை எழும்பூா் நிலையத்தில் வழக்கமாக நின்று செல்லும் நிலையில் ஜன. 21, 22 ஆகிய தேதிகளில் கடற்கரைச் சாலை நிலையத்திலும் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.