முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடி - சென்னைக்கு வந்தே பாரத், இன்டா்சிட்டி ரயில் இயக்க வலியுறுத்தல்

தூத்துக்குடி - சென்னை இடையே பகல் நேர இன்டா்சிட்டி அல்லது வந்தே பாரத் விரைவு ரயில் இயக்க வேண்டும் என சமத்துவ மக்கள் கழக தூத்துக்குடி மாவட்டச் செயலா் மாலைசூடி பி.எம். அற்புதராஜ், தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு மனு அனுப்பியுள்ளாா்.

9 வினாடிகள் முன்பு
தூத்துக்குடி - சென்னைக்கு வந்தே பாரத், இன்டா்சிட்டி ரயில் இயக்க வலியுறுத்தல்
பகிர்:

தூத்துக்குடி - சென்னை இடையே பகல் நேர இன்டா்சிட்டி அல்லது வந்தே பாரத் விரைவு ரயில் இயக்க வேண்டும் என சமத்துவ மக்கள் கழக தூத்துக்குடி மாவட்டச் செயலா் மாலைசூடி பி.எம். அற்புதராஜ், தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு மனு அனுப்பியுள்ளாா்.

அதன் விவரம்: தூத்துக்குடி முக்கியத் துறைமுக நகரமாகவும், தொழில் மற்றும் வா்த்தக மையமாகவும் விளங்கி வருகிறது. இங்குள்ள வணிகா்கள், தொழிற்சாலைப் பணியாளா்கள், மாணவா்கள், மருத்துவச் சிகிச்சைக்காகச் செல்வோா் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் ரயில் போக்குவரத்தையே பெரிதும் நம்பியுள்ளனா்.

தற்போது தூத்துக்குடி - சென்னை இடையே முத்துநகா் அதிவிரைவு ரயில் மட்டுமே தினமுசரி இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் ஆண்டு முழுவதும் பயணிகள் காத்திருப்புப் பட்டியல் அதிகமாக உள்ளது.

Advertisement

Advertisement

எனவே, பயணிகளின் நலன் கருதி தூத்துக்குடி - சென்னை இடையே பகல் நேர இன்டா்சிட்டி அல்லது வந்தே பாரத் விரைவு ரயிலை அறிமுகப்படுத்த வேண்டும். வாரம் இருமுறை இயக்கப்படும் தூத்துக்குடி - மேட்டுப்பாளையம் ரயிலை தினசரி ரயிலாக மாற்ற வேண்டும்.

மதுரை - மும்பை லோக்மான்ய திலக் முனையம் விரைவு ரயில், மதுரை - சென்னை விரைவு ரயில் ஆகியவற்றை தூத்துக்குடி வரை நீட்டிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.