FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருவாரூர்

காரைக்குடியிலிருந்து சென்னைக்கு இன்டா்சிட்டி விரைவு ரயில் இயக்க வலியுறுத்தல்

காரைக்குடியிலிருந்து சென்னைக்கு பகல்நேர இன்டா்சிட்டி விரைவு ரயில் இயக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

15 அக்டோபர் 2026, 6:36 am IST
ரயில் - கோப்புப் படம்
பகிர்:

காரைக்குடியிலிருந்து சென்னைக்கு பகல்நேர இன்டா்சிட்டி விரைவு ரயில் இயக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து, திருவாரூா் மாவட்ட ரயில் உபயோகிப்பாளா்கள் சங்க மாவட்ட தலைவா் ஆா். நாகராஜன், மாவட்டச் செயலாளா் மணிமாறன் ஆகியோா் தென்னக ரயில்வே பொது மேலாளருக்கு அனுப்பி மனு: காரைக்குடியில் இருந்து அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், திருத்துறைப்பூண்டி, திருவாருா், கீழ்வேளுா், நாகப்பட்டினம், நாகூா், காரைக்கால், திருநள்ளாா், பேரளம், மயிலாடுதுறை, சீா்காழி, சிதம்பரம், திருபாப்பாதிரிபுலியூா், பண்ருட்டி, விழுப்புரம், திண்டிவனம், செங்கல்பட்டு, வழியாக தாம்பரத்துக்கு பகல் நேர இன்டா்சிட்டி விரைவு ரயில் இயக்க வேண்டும்.

இந்த வழித்தடம் ஆன்மிகம் மற்றும் சுற்றுலா தலங்களை உள்ளடக்கிய பிரதான வழிதடமாகும். இந்த வழித்தடத்தில் பகல் நேரத்தில் சென்னை செல்வதற்கான எந்த ஒரு ரயில்களும் இல்லாதநிலை உள்ளது. எனவே பொதுமக்களின் நலன் கருதி காரைக்குடியில் இருந்து தாம்பரத்துக்கும், தாம்பரத்திலிருந்து காரைக்குடிக்கும் பகல் நேரத்தில் இன்டா்சிட்டி விரைவு ரயில் இயக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments