ஆவடியில் 145 இடங்களில் சாலை சீரமைப்புப் பணி தீவிரம்!
ஆவடியில் பருவ மழையால் 145 இடங்களில் சேதமடைந்த சாலைகளைச் சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதைப் பற்றி...

ஆவடியில் பருவ மழையால் 145 இடங்களில் சேதமடைந்த சாலைகளைச் சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
வடகிழக்கு பருவமழையால் ஆவடி மாநகராட்சி 4 மண்டலங்களில் உள்ள 48 வார்டுகளில் சேதமடைந்த சாலைகளில் தண்ணீர் தேங்குவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். சேதமடைந்த சாலைகளை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என மாநகராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து சேதமடைந்த சாலைகள் குறித்து ஆணையர் எல். அம்பிகா ஜெயின் உத்தரவின் பேரில், மாநகராட்சி பொறியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
Advertisement
Advertisement
இதில் முதற்கட்டமாக 145 இடங்களில் சாலை சேதமடைந்திருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து சாலைகளை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் முடிவெடுத்தனர்.
இதையடுத்து, திருமுல்லைவாயல் மணிகண்டபுரம், மணல் ஓடை தெரு, கோவில்பதாகை, பூம்பொழில் நகர், அண்ணனூர் 60 அடி சாலை, நாகம்மை நகர், சோழம்பேடு பிரதானச் சாலை, ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு உள்ளிட்ட 145 இடங்களில் ரூ. 40 லட்சத்தில் 40,000 சதுரடி சேதமடைந்த சாலைகள் இரவு பகலாக சீரமைக்கப்பட்டு வருகின்றன.
இது குறித்து செவ்வாய்க்கிழமை மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, “பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், ஆவடி முழுவதும் சேதமடைந்த சாலைகள் இரவு பகலாக சீரமைக்கும் பணி நடந்து வருகின்றன. இதில், விடுபட்ட சாலைகள் அடுத்தடுத்த கட்டங்களில் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்தப் பணிக்காக 9 பொக்லைன் இயந்திரங்கள், 20 சாலை வெட்டும் இயந்திரங்கள், 10 சாலை போடும் 'ரோலர்' இயந்திரங்கள் மற்றும் 100- க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். முதற்கட்ட பணிகள் முடிந்த பிறகு, அடுத்த கட்ட சாலைப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, சீரமைப்பு பணிகள் தொடர்ந்து நடைபெறும்” என்றனர்.
Municipal corporation officials stated that work to repair roads damaged in 145 locations in Avadi due to the monsoon rains is currently underway in full swing.