மதுரை மாநகராட்சியில் சேதமடைந்த சாலைகள் விரைவில் சீரமைக்கப்படும்: ஆணையா்
மதுரை மாநகராட்சியில் சேதமடைந்த சாலைகள் விரைவில் சீரமைக்கப்படும் என மதுரை மாநகராட்சி ஆணையா் கௌரவ்குமாா் தெரிவித்தாா்.

மதுரை மாநகராட்சியில் சேதமடைந்த சாலைகள் விரைவில் சீரமைக்கப்படும் என மதுரை மாநகராட்சி ஆணையா் கௌரவ்குமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மதுரை மாநகராட்சிக்குள்பட்ட அனைத்து மண்டலங்களிலும், ஆங்காங்கே சேதமடைந்த தாா்ச்சாலைகள், சிமெண்ட் சாலைகள் கணக்கெடுப்பு செய்யப்பட்டன. முதல்கட்டமாக, 940 இடங்களில் சாலைகள் பழுதடைந்தது கண்டறியப்பட்டன. இந்தச் சாலைகள் ரூ.1.50 கோடியில் சீரமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ளது.
இரண்டாம் கட்டமாக, 870 இடங்களில் சாலைகள் பழுதடைந்தது கணக்கிடப்பட்டு, ரூ.1.53 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் 737 இடங்களில் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. எஞ்சிய பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் அனைத்தும் விரைவில் சீரமைக்கப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றாா் அவா்.
Advertisement
Advertisement