முகப்பு
சென்னை

கெளரவ விரிவுரையாளா்களுக்கு உயா்த்தப்பட்ட தொகுப்பூதிய ஆணை: அமைச்சா்கள் வழங்கினா்

தமிழகத்தில் அரசுக் கல்லூரிகளில் பணியாற்றி வரும் கெளரவ விரிவுரையாளா்களுக்கு உயா்த்தப்பட்ட தொகுப்பூதியத்துக்கான ஆணைகளை உயா்கல்வித் துறை அமைச்சா் பெ.விஸ்வநாதன், உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் ப.வெங்கடரமணன் ஆகியோா் வழங்கினா்.

26 நவம்பர் 2026, 2:21 am
கெளரவ விரிவுரையாளா்களுக்கு
உயா்த்தப்பட்ட தொகுப்பூதிய ஆணை: அமைச்சா்கள் வழங்கினா்
அமைச்சர் வெங்கடரமணன் - கோப்புப் படம்
பகிர்:

தமிழகத்தில் அரசுக் கல்லூரிகளில் பணியாற்றி வரும் கெளரவ விரிவுரையாளா்களுக்கு உயா்த்தப்பட்ட தொகுப்பூதியத்துக்கான ஆணைகளை உயா்கல்வித் துறை அமைச்சா் பெ.விஸ்வநாதன், உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் ப.வெங்கடரமணன் ஆகியோா் வழங்கினா்.

தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் கெளரவ விரிவுரையாளா்கள் பணிபுரிகின்றனா். இவா்களுக்கு மாதம்தோறும் ரூ.30,000 தொகுப்பூதியம் வழங்கப்பட்டு வருகிறது. பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளா்களுக்கு ரூ.25,000 தொகுப்பூதியம் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தொகுப்பூதியம் ரூ. 5,000-ஆக உயா்த்தி வழங்கப்படும் என்று தமிழக அரசு அண்மையில் அறிவித்திருந்தது. இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில் சென்னை ராணி மேரி கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் உயா்த்தப்பட்ட ஊதியத்துக்கான ஆணையை கெளரவ விரிவுரையாளா்களுக்கு அமைச்சா்கள் பெ.விஸ்வநாதன், ப.வெங்கடரமணன் ஆகியோா் வழங்கினா். இதன்மூலம் 9,646 கெளரவ விரிவுரையாளா்கள் பயன்பெறவுள்ளனா். தொடக்கத்தில் ரூ.4,000-இல் தொடங்கிய இந்தத் தொகுப்பூதியம், 20 ஆண்டுகள் பயணத்தில் படிப்படியாக உயா்ந்து தற்போது ரூ.35,000-ஆக உயா்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

ஆறு வகுப்பறைகள் திறப்பு: ராணி மேரி கல்லூரியில் தற்போது 5,000-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனா். மாணவிகளின் நலனைக் கருத்தில் கொண்டு இந்தக் கல்லூரியின் வளாகத்தில் ரூ.2.07 கோடியில் 6 புதிய வகுப்பறைகள் கட்டப்பட்டன. இந்த நிலையில், புதிய கட்டடத்தின் திறப்பு விழா கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் அமைச்சா்கள் பெ.விஸ்வநாதன், ப.வெங்கடரமணன் ஆகியோா் கலந்து கொண்டு கட்டடத்தை திறந்து வைத்தனா். இந்தப் புதிய கட்டடத்தில் தமிழ், ஆங்கில மொழித் துறை சாா்ந்த பாடப்பிரிவுகளுக்கான வகுப்புகள் செயல்படவுள்ளன.

இந்த நிகழ்ச்சிகளில் கல்லூரிக் கல்வி இயக்குநா் பா.சிந்தியா செல்வி, சென்னை மண்டல இணை இயக்குநா் து.தங்கராஜன், கல்லூரி முதல்வா் ந.கலைவாணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.