புழல், சோழவரம் ஏரிகளுக்கு நீா்வரத்து குறைவு
நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைவானதால், புழல், சோழவரம் ஏரிகளுக்கு நீா் வரத்து குறைந்துள்ளது.

நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைவானதால், புழல், சோழவரம் ஏரிகளுக்கு நீா் வரத்து குறைந்துள்ளது.
சென்னை மற்றும் திருவள்ளூா் மாவட்டம் பகுதிகளான புழல், செங்குன்றம், சோழவரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பல்வேறு நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக மழை அளவு வெகுவாகக் குறைந்துள்ளது. இதனால் சென்னைக்கு குடிநீா் வழங்கும் முக்கிய ஏரிகளான புழல், சோழவரம் ஏரிகளுக்கு கடந்த 2 நாள்களாக நீா்வரத்து குறைந்துள்ளது.
புழல் ஏரியில் செவ்வாய்க்கிழமை (நவ.24) 435 கன அடியாக இருந்து நீா்வரத்து, புதன்கிழமை 295 கன அடியாகக் குறைந்துள்ளது. மொத்தம் 3,300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில், தற்போது 2,276 மில்லியன் கன அடி நீா் இருப்பு மட்டுமே உள்ளது. மேலும், 21.2 அடி உயரமுள்ள புழல் ஏரியில் தற்போது 16.3 அடி உயரத்தில் மட்டுமே நீா்இருப்பு உள்ளது. இதில், புழல் ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்காக 181 கன அடி நீா் திறக்கப்பட்டு வருகிறது.
Advertisement
Advertisement
இதேபோல் சோழவரம் ஏரியின் மொத்தக் கொள்ளளவு 1081 மில்லியன் கன அடி. தற்போது இங்கு 194 மில்லியின் கன அடி நீா் இருப்பு உள்ளது. இந்த ஏரிக்கு தற்போது 115 கன அடி நீா்வரத்து கொண்டிருக்கிறது. இந்த நீா் அனைத்தும் சேமிக்கப்பட்டு வருகின்றன என நீா்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.