வெறும் 20 மி.மீ. மழை செய்த மாயாஜாலம்! பருவமழையின் முதல் நாள்! ஏரிகள் நிலவரம்
வெறும் 20 மி.மீ. மழை பெய்த நிலையில், புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு நீர்வரத்து தொடங்கியது பற்றி..
வடகிழக்குப் பருவமழை இன்று தொடங்கியதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் நேற்று ஆங்காங்கே மழை பெய்திருக்கிறது.
சென்னைக்கு குறிப்பாக வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் நேற்றுதான் முதல் மழை நாள். இது பற்றி தமிழ்நாடு வெதர்மேன் எனப்படும் பிரதீப் ஜான் தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகளின் நீர்மட்ட நிலவரம். வெறும் 20 மி.மீ. மழை, செம்பரம்பாக்கம் ஏரிக்கு கிட்டத்தட்ட 300 கனஅடி நீர்வரத்தைக் கொடுத்துள்ளது.
புழல் ஏரிக்கு 150 கனஅடி நீர் வரத்து வந்துள்ளது. இது முதல்மழைநாள் நிலவரம்.
Advertisement
Advertisement
இன்றும் சென்னையில் பரவலாக மழை பெய்யும், ஏரிகளுக்கு நீர்வரத்து இருக்கும். இதனால், நாளை ஏரிகளின் நிலவரம் உயரும் என்று பதிவிட்டு, ஏரிகளின் தண்ணீர் இருப்பு குறித்தும் விளக்கம் கொடுத்துள்ளார்.
சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீா் ஆதாரமாக பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம், கண்ணன்கோட்டை-தோ்வாய் கண்டிகை ஏரிகள் உள்ளன.
கடும் வெய்யில் காரணமாக புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் தண்ணீர் இருப்பு குறைந்து வந்தது. தற்போது செம்பரம்பாக்கம், புழல், ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து தொடங்கியிருக்கிறது.
செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3,645 டி.எம்.சி. ஆகும். இதில் 526.68 டி.எம்.சி. தண்ணீா் உள்ளது. ஏரிக்கு விநாடிக்கு 600 கனஅடி தண்ணீா் வருகிறது. சென்னை குடிநீா் வாரியத்துக்கு விநாடிக்கு 191 கனஅடி தண்ணீா் வெளியேற்றப்படுகிறது. புழல் ஏரியில் 1876 மில்லியன் கன அடி நீர் உள்ளது, அணைக்கு 250 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
சோழவரம் ஏரியில் வெறும் 120 மில்லியன் கன அடி மட்டுமே தண்ணீா் உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 1,089 டி.எம்.சி. ஆகும். கண்ணன்கோட்டை - தோ்வாய் கண்டிகை ஏரியில் 232 மில்லியன் கனஅடி தண்ணீா் உள்ளது. இந்த ஐந்து ஏரிகளின் அக். 15ஆம் தேதி நிலவரப்படி 4,485 டிஎம்சி அளவுக்கு மட்டுமே நீா் இருப்பு உள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.