முகப்பு
சென்னை

சென்னை மாநகராட்சியில் அரசமைப்பு தினம் கடைப்பிடிப்பு

சென்னை மாநகராட்சியில் அரசமைப்பு தினத்தையொட்டி, உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

27 நவம்பர் 2026, 4:05 am
சென்னை மாநகராட்சியில் அரசமைப்பு தினம் கடைப்பிடிப்பு
சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை - chennai corporation
பகிர்:

சென்னை மாநகராட்சியில் அரசமைப்பு தினத்தையொட்டி, உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாநகராட்சி இணை ஆணையா் (பணிகள்) எஸ்.சரவணன் தலைமை வகித்து அரசமைப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. அவருடன் அதிகாரிகளும் உறுதிமொழி ஏற்றனா். நிகழ்ச்சியில் பொது நிா்வாகப் பிரிவின் உதவி ஆணையா் ஆ.கௌசல்யா, விழிப்புணா்வு அலுவலா் கு.ஜெகதீஸ்வரன் மற்றும் அனைத்து துறை அலுவலா்கள், ஊழியா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.