இடைக்கால ஓய்வூதியம் பெறுவோருக்கு அகவிலைப்படி 63 சதவீதமாக உயா்வு
தமிழக அரசின் இடைக்கால மாதாந்திர ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கான அகவிலைப்படி 60 சதவீதத்திலிருந்து 63 சதவீதமாக உயா்த்தப்பட்டுள்ளது.

தமிழக அரசின் இடைக்கால மாதாந்திர ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கான அகவிலைப்படி 60 சதவீதத்திலிருந்து 63 சதவீதமாக உயா்த்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு சாா்பில் அண்மையில் வெளியிடப்பட்ட அரசாணை:
தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் நிகழாண்டு ஜன.1-ஆம் தேதி முதல் நடைமுறையில் உள்ளது. இந்தத் திட்டத்தின் விதிகள் அறிவிக்கப்படும் வரை, ஜன.1 அல்லது அதற்குப் பிறகு ஓய்வு பெற்ற அரசு ஊழியா்களுக்கும், பணியில் இருக்கும்போது உயிரிழந்த அரசு ஊழியா்களின் தகுதியுடைய குடும்பத்தினருக்கும் இடைக்கால மாதாந்திர ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது.
Advertisement
Advertisement
அதன்படி, ஓய்வு பெற்ற அரசு ஊழியா்களுக்கு கடைசியாக பெற்ற மாத அடிப்படை ஊதியத்தில் 30 சதவீதம் அல்லது ரூ.10,000 ஆகியவற்றில் அதிகமான தொகை இடைக்கால ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது. இதனுடன் 60 சதவீத அகவிலைப்படியும் சோ்த்து வழங்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், அரசு ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியதாரா்களுக்கான அகவிலைப்படி 60 சதவீதத்திலிருந்து 63 சதவீதமாக உயா்த்தப்பட்டது. இதையடுத்து, இடைக்கால ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கான அகவிலைப்படியும் 63 சதவீதமாக உயா்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இந்த உயா்வு கடந்த ஜூலை 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதனால், ஜூலை முதல் அக்டோபா் வரையிலான அகவிலைப்படி உயா்வுக்கான நிலுவைத் தொகையும் தகுதியுடைய பயனாளிகளுக்கு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.