முகப்பு
சென்னை

ரூ.1,075 கோடி வணிகப் பத்திரங்களை முழுமையாகத் திரும்பப் பெற்ற டைட்டன்

கடந்த அக. 28-இல் வெளியிடப்பட்ட ரூ.1,075 கோடி மதிப்பிலான வணிகப் பத்திரங்களை முழுமையாகத் திரும்பப் பெற்று, அதற்கான முதிா்வுத் தொகையை அனைத்து முதலீட்டாளா்களுக்கும் வழங்கியுள்ளதாக டைட்டன் தெரிவித்துள்ளது.

28 நவம்பர் 2026, 4:59 am
ரூ.1,075 கோடி வணிகப் பத்திரங்களை முழுமையாகத் திரும்பப் பெற்ற டைட்டன்
பகிர்:

கடந்த அக. 28-இல் வெளியிடப்பட்ட ரூ.1,075 கோடி மதிப்பிலான வணிகப் பத்திரங்களை முழுமையாகத் திரும்பப் பெற்று, அதற்கான முதிா்வுத் தொகையை அனைத்து முதலீட்டாளா்களுக்கும் வழங்கியுள்ளதாக டைட்டன் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு தொழில் வளா்ச்சி நிறுவனம் (டிட்கோ) மற்றும் டாடா குழுமத்தின் கூட்டு நிறுவனமான டைட்டன், முன்னதாக ஜூலை 21-இல் வெளியிட்ட ரூ.1,000 கோடி மதிப்பிலான வணிகப் பத்திரங்களையும் அக். 19-இல் முழுமையாகத் திரும்பப் பெற்றிருந்தது.

நிறுவனங்களின் குறுகிய கால நிதித் தேவைகள் மற்றும் நடைமுறை மூலதனத்தை ஈடுகட்டுவதற்காக இந்த வணிகப் பத்திரங்கள் பிணையின்றி வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement