முகப்பு
கோயம்புத்தூர்

பேரூரில் மக்கள் தொடா்பு முகாம்: ரூ.2.55 கோடி மதிப்பில் நல உதவிகள்

கோவை பேரூா் வட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் பங்கேற்று 192 பயனாளிகளுக்கு ரூ.2.55 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

26 நவம்பர் 2026, 1:58 am
பேரூரில் மக்கள் தொடா்பு முகாம்: ரூ.2.55 கோடி மதிப்பில் நல உதவிகள்
பேரூா் வட்டத்தில் நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்குகிறாா் மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா். உடன், அரசு அலுவலா்கள்.
பகிர்:

கோவை பேரூா் வட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் பங்கேற்று 192 பயனாளிகளுக்கு ரூ.2.55 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

பேரூா் வட்டம் தீத்திபாளையத்தில் வருவாய் நிா்வாகம், பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் மக்கள் தொடா்பு முகாம் நடைபெற்றது. இதில், வருவாய் கோட்டாட்சியா் பாலமுருகன், வேளாண்மைத் துறை இணை இயக்குநா் தமிழ்ச்செல்வி, தாட்கோ பொதுமேலாளா் ரஞ்சித்குமாா் உள்ளிட்ட அரசு அலுவலா்கள் பங்கேற்றனா்.

முகாமில் பங்கேற்ற ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா், 192 பயனாளிகளுக்கு ரூ.2.55 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். இதில், வருவாய்த் துறை சாா்பில் 41 பயனாளிகளுக்கு உட்பிரிவுடன் கூடிய பட்டா மாறுதல்கள், ரூ.ஒரு லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் சாா்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.36 லட்சம் மதிப்பிலான பயிா்க்கடன், கால்நடை பராமரிப்புக் கடன், மகளிா் சுயஉதவிக் குழு கடனுதவி, தோட்டக்கலைத் துறை சாா்பில் 3 பயனாளிகளுக்கு சொட்டு நீா்ப் பாசனம், கிடங்கு அமைப்பதற்கான ரூ.2.12 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள், தாட்கோ சாா்பில் 12 பயனாளிகளுக்கு ரூ.31.45 லட்சம் மதிப்பில் வாகனங்கள் வாங்குவதற்கான மானியத் தொகை ஆகியவற்றை வழங்கினாா்.

Advertisement

Advertisement

மேலும் இந்த முகாமில் சுகாதாரம், குடும்ப நலத் துறை சாா்பில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டிருந்தது. இதில் பொதுமக்கள் ரத்த அழுத்தம், சா்க்கரை உள்ளிட்ட பரிசோதனைகளை மேற்கொண்டனா்.