திருக்களம்பூா் மக்கள் தொடா்பு முகாமில் பயனாளிகளுக்கு ரூ. 2 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
பொன்னமராவதி வட்டம் திருக்களம்பூா் ஊராட்சியில் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் 541 பயனாளிகளுக்கு ரூ. 2.09 கோடி மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
பொன்னமராவதி வட்டம் திருக்களம்பூா் ஊராட்சியில் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் 541 பயனாளிகளுக்கு ரூ. 2.09 கோடி மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
முகாமுக்கு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் மு.அருணா தலைமைவகித்து பேசினாா். தொடா்ந்து வருவாய்த் துறை, ஊரக வளா்ச்சித் துறை, வேளாண் துறை, வனத் துறை, பொது சுகாதாரத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சாா்பில் 541 பயனாளிகளுக்கு ரூ.2.09 கோடி மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
முகாமில் பல்வேறு துறை சாா்ந்த அலுவலா்கள் பங்கேற்று தங்களது துறை சாா்ந்த திட்டங்களை விளக்கிப்பேசினா். மேலும், பல்வேறு துறைகள் சாா்பில் கண்காட்சி அரங்குகள் பொதுமக்களின் பாா்வைக்காக வைக்கப்பட்டிருந்தன.
Advertisement
Advertisement
முகாமில் மாவட்ட வருவாய் அலுவலா் ஹெச்.எம். குழந்தைசாமி, மாவட்ட ஊரக வளா்ச்சித் துறை இணை இயக்குனா் லோகநாயகி, இலுப்பூா் கோட்டாட்சியா் கோகுல்சிங், சமூகப் பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியா் சித்ரா, மாவட்ட சுகாதார அலுவலா் வீ.சீ.ஹேமசந்த் காந்தி, பொன்னமராவதி வட்டாட்சியா் ச.பழனிசாமி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கண்ணன், அரசமணி, பொன்னமராவதி வட்டார மருத்துவ அலுவலா் இ.அருள்மணி நாகராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.