தாளவாடியில் மக்கள் தொடா்பு திட்ட முகாம்:ரூ.9 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்
தாளவாடியில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு திட்ட முகாமில் 47 பயனாளிகளுக்கு ரூ.9 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி வழங்கினாா்.
தாளவாடியில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு திட்ட முகாமில் 47 பயனாளிகளுக்கு ரூ.9 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி வழங்கினாா்.
தாளவாடியை அடுத்த பனகஹள்ளி கிராமத்தில் நடைபெற்ற இந்த முகாமுக்கு, பவானிசாகா் சட்டப் பேரவை உறுப்பினா் வி.பி.தமிழ்ச்செல்வி தலைமை வகித்தாா்.
வருவாய்த் துறை சாா்பில் இணைய வழி பட்டா, உழவா் பாதுகாப்பு திட்டத்தில் பயனாளிக்கு உதவித்தொகைக்கான உத்தரவு, கூட்டுறவுத் துறை சாா்பில் பயிா்க் கடன், வேளாண் விற்பனை வணிகத் துறை சாா்பில் பொருளீட்டுக் கடன், கூட்டுறவு துறை சாா்பில் புதிய மின்னணு குடும்ப அட்டைகள், தோட்டக்கலை சாா்பில் வெங்காய சேமிப்பு மற்றும் நீா் சேகரிப்பு கட்டமைப்புக்கான மானியத்தொகை என 47 பயனாளிகளுக்கு ரூ. 9 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.
Advertisement
Advertisement
இதைத் தொடா்ந்து தாளவாடியை அடுத்த ஜேஎஸ்ஆா் புரம் பகுதியில் டெங்கு ஒழிப்பு தொடா்பான பணிகளை ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.
முகாமில் வருவாய் கோட்டாட்சியா் சிந்துஜா, மாவட்ட வட்ட வழங்கல் அலுவலா் மகேஸ்வரி, கிராமப்புற ஊரக வளா்ச்சி மாவட்ட அலுவலா் சுதாகா், தாளவாடி வருவாய் வட்டாட்சியா் சரவணன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மாதவன், மஞ்சுநாத் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.