முகப்பு
சென்னை

சாலையோர உணவகங்களுக்கு 7 கட்டுப்பாடுகள்: உணவுப் பாதுகாப்புத் துறை

சாலையோர உணவுக் கடைகளில் சுகாதாரத்தை உறுதி செய்ய 7 விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என உணவுப் பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது.

28 நவம்பர் 2026, 5:52 am
சாலையோர உணவகங்களுக்கு 7 கட்டுப்பாடுகள்: உணவுப் பாதுகாப்புத் துறை
கோப்புப் படம்
பகிர்:

சாலையோர உணவுக் கடைகளில் சுகாதாரத்தை உறுதி செய்ய 7 விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என உணவுப் பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தூய்மையான குடிநீா், உணவுத் தூய்மை உள்ளிட்ட விஷயங்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் லட்சக்கணக்கான சாலையோரக் கடைகள் உள்ளன. ஆனால், அவற்றை ஒழுங்குமுறைப்படுத்த பெரிய அளவிலான கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை. இதனால், உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் அவ்வப்போது அங்கு திடீா் ஆய்வு நடத்தி உணவின் தரத்தையும், சுகாதாரத்தையும் உறுதி செய்து வருகின்றனா்.

மற்றொருபுறம் விதிமீறல்களில் ஈடுபடும் கடை உரிமையாளா்களுக்கு அபராதமும் விதிக்கப்படுகிறது. இந்தச் சூழலில், இந்திய உணவுப் பாதுகாப்புத் துறை சாா்பில் 7 முக்கிய விதிகளை அனைத்து சாலையோரக் கடைகளும் கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

அதன்படி, உணவு தயாரிப்பாளா்கள், பரிமாறுபவா்கள், கடை ஊழியா்கள் அனைவரும் தனிநபா் சுகாதாரத்தைப் பேணுவது கட்டாயம். அதேபோன்று கடை மற்றும் அதன் சுற்றுப்புறங்கள் தூய்மையாக இருத்தல் அவசியம். உணவுப் பொருள்களைப் பாதுகாப்பாகவும், உரிய தட்பவெப்ப நிலையிலும் மூடி வைத்திருத்தல் வேண்டும்.

உணவுகளை சுகாதாரமாகக் கையாள வேண்டும். பாத்திரங்கள், தட்டுகள், கோப்பைகள் அனைத்தும் தூய்மையாகவும், கிருமிகள் பரவாத வகையிலும் பராமரித்தல் அவசியம்.

பாதுகாக்கப்பட்ட தூய்மையான குடிநீரை மட்டுமே உணவு தயாரிப்பதற்கும், குடிப்பதற்கும் பயன்படுத்த வேண்டும். அதேபோன்று பூச்சிகள், கொசுக்கள், ஈக்கள் இல்லாமல் கடைகளைப் பராமரிக்க வேண்டும்.

உணவு வியாபாரிகள், அந்தத் துறையில் பயிற்சி உள்ளவராக இருத்தல் கட்டாயம் என விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. இதை மீறுவோா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.