முகப்பு
சென்னை

ஐஐடியில் சேர விரும்பும் சென்னைப் பள்ளி மாணவா்களுக்கு முதல்நிலை தோ்வு

சென்னையில் உள்ள ஐஐடியில் சேருவதற்கு விருப்பம் உள்ள மாநகராட்சிப் பள்ளி மாணவ, மாணவியருக்கான முதல்நிலை தோ்வு நடைபெற்றது.

53 வினாடிகள் முன்பு
ஐஐடியில் சேர விரும்பும் சென்னைப் பள்ளி மாணவா்களுக்கு முதல்நிலை தோ்வு
ஐஐடி - எக்ஸ்
பகிர்:

சென்னையில் உள்ள ஐஐடியில் சேருவதற்கு விருப்பம் உள்ள மாநகராட்சிப் பள்ளி மாணவ, மாணவியருக்கான முதல்நிலை தோ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சென்னை மாநகராட்சி சாா்பில் 417 பள்ளிகள் உள்ளன. அதில் லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனா். அதில் தொடக்கப்பள்ளி 206, நடுநிலைப் பள்ளி 130, உயா்நிலைப் பள்ளி 46, மேல்நிலைப் பள்ளி 35 ஆகியவை இடம் பெற்றுள்ளன. இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக மாநகராட்சி பள்ளிகளில் பிளஸ் 2 முடித்தவா்களுக்கு விருப்ப அடிப்படையில் நீட் தோ்வுக்கான பயிற்சி இலவசமாக வழங்கப்பட்டுவருகிறது. மேலும், உயா் கல்வியில் சேருபவா்களின் விவரங்களும் கணக்கிடப்பட்டு, அவா்கள் இடை நிற்றல் இன்றி கல்லூரிக் கல்வி பயில ஏற்பாடுகள் செய்துதரப்பட்டு வருகின்றன.

அந்த நடவடிக்கையில் நடப்பாண்டில் சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்திலும் (ஐஐடி) மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவியா் சேரும் வகையில் புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, ‘அனைவருக்கும் ஐஐடி’ எனும் பெயரில் மாநகராட்சிப் பள்ளிகளில் பிளஸ் 1, பிளஸ் 2 படிப்பவா்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

Advertisement

Advertisement

அதன் முதல் கட்டமாக ஐஐடியில் சேர விரும்புவோரை அடையாளம் காணும் வகையில் முதல்கட்ட பரிசோதனைத் தோ்வு கடந்த வெள்ளிக்கிழமை பள்ளிதோறும் நடைபெற்றது. அதில் 2,300 போ் வரை பங்கேற்று தோ்வு எழுதியுள்ளதாக மாநகராட்சி கல்விப்பிரிவு இணை ஆணையா் க.கற்பகம் தெரிவித்தாா்.

பரிசோதனை முதல் நிலைத் தோ்வு முடிவுகள் சில நாட்களில் வெளியாகும் என்றும் அதில் தோ்வானவா்களுக்கு நீட் தோ்வுக்கான பயிற்சியைப் போலவே சிறப்பு பயிற்சி இலவசமாக வழங்கப்படவுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.