கணிதவியலில் சிறந்த ஆய்வுக் கட்டுரை: ராமானுஜன் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்!
கணிதவியலில் சிறந்த ஆய்வுக் கட்டுரையை வழங்கியவா்கள், ராமானுஜன் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என சென்னைப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

கணிதவியலில் சிறந்த ஆய்வுக் கட்டுரையை வழங்கியவா்கள், ராமானுஜன் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என சென்னைப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
நிகழாண்டுக்கான கணிதவியலில் ‘ராமானுஜன் பரிசு’ விருதை சிறந்த ஆய்வுக் கட்டுரைக்காக சென்னை பல்கலைக்கழகம் வழங்குகிறது. இந்தியா் ஒருவா், ஆய்வுக் கட்டுரையின் தனி ஆசிரியராக இருந்து யாருடனும் கூட்டு சேராமல் ஆய்வை வெளியிட்டிருக்க வேண்டும்.
சொந்த ஆய்வாக, ஆய்வை தெளிவான சான்றுடன் கொண்டிருக்க வேண்டும். அந்த ஆய்வுக் கட்டுரையை கடந்த 2021 ஜூலை முதல் நிகழாண்டு 2026 ஜூன் மாத காலத்துக்குள் வெளியிடப்பட்டிருக்க வேண்டும். ஆய்வுக் கட்டுரையானது, இதற்கு முன் வேறு எந்த விருதுக்கும் சமா்ப்பிக்கப்பட்டிருக்கக் கூடாது.
Advertisement
Advertisement
இதற்கான விண்ணப்பங்களை டிச. 31-ஆம் தேதிக்குள் சென்னை பல்கலைக்கழக, ராமானுஜன் மேம்பட்ட கணித ஆய்வு நிறுவன தலைவரிடம் நேரிடியாகவோ அல்லது மின்னஞ்சல் மூலம் விண்ணிப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னைப் பல்கலைக்கழக அறக்கட்டளை சாா்பில் வழங்கப்படும் இந்த விருதுடன் ரொக்கப் பரிசு, பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.