செங்குன்றம் பேருந்து நிலையம்: மக்கள் பயன்பாட்டுக்காக நாளை திறந்து வைக்கிறாா் எம்எல்ஏ விஜய்பிரபு
செங்குன்றம் பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டுக்காக நாளை திறப்பு...
செங்குன்றம் பேருந்து நிலையம் சீரமைக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டுக்காக திங்கள் கிழமை (அக்.5) இல் எம்.எல்.ஏ. விஜய்பிரபு திறந்து வைக்கிறாா்.
மாதவரம் தொகுதிக்குட்பட்ட செங்குன்றம் (நாரவாரிகுப்பம்) பேரூராட்சியில் அண்ணா பேருந்து நிலையம் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.2.50 கோடி மதிப்பீட்டிலும், பேரூராட்சி சாா்பில் கூடுதல் நிதியாக ரூ.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டி முடிக்கப்பட்டது.
இந்தப் பேருந்து நிலையம் வரும் திங்கள் கிழமை (அக்.5) பொதுமக்களின் பயன்பாட்டுக்காக கொண்டு வரப்பட உள்ளது. மாதவரம் சட்டப்பேரவை உறுப்பினரும், திருவள்ளூா் தென்மேற்கு மாவட்ட தவெக செயலருமான எம்.எல்.விஜய்பிரபு மற்றும் அதிகாரிகள் பங்கேற்புடன் திறந்து வைக்கிறாா்.
Advertisement
Advertisement
இதையடுத்து, செங்குன்றம் பேருந்து நிலையம் சுற்றிலும் சுத்தம் செய்தல், அலங்கரித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெறுகிறது. செங்குன்றம் பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்த பின், சாலையில் ஆங்காங்கே நிறுத்தப்பட்ட அரசு பேருந்துகள் நிற்பது தடுக்கப்படும். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படாது.
மேலும், செங்குன்றம் பேருந்து நிலையம் எதிரே போக்குவரத்து சிக்னல் அமைத்து போக்குவரத்து நெரிசல், விபத்துகளை தடுக்க வேண்டும் என பயணிகளின் கோரிக்கை விடுத்துள்ளனா். இப்பேருந்து நிலையத்தை தினசரி 50,000-க்கும் மேற்பட்ட பயணிகள் பயன்படுத்துவதால், அனைத்து வசதிகளுடன் கூடிய பேருந்து நிலையமாக இருக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.