FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ராணிப்பேட்டை

ராணிப்பேட்டையில் ரூ.13.55 கோடியில் புதிய பேருந்து நிலையம்: முதல்வா் திறந்து வைத்தாா்.

ராணிப்பேட்டையில் ரூ.13.55 கோடியில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையத்தை தமிழக முதல்வா் ஜோசப் விஜய் காணொலி காட்சி வாயிலாக புதன்கிழமை திறந்து வைத்தாா்.

18 நவம்பர் 2026, 11:14 pm
புதிய பேருந்து நிலையத் திறப்பு விழாவில் பங்கேற்ற அமைச்சா் வ.காந்தி ராஜ், ஆட்சியா் பிரியா ரவிச்சந்திரன் உள்ளிட்டோா்.
பகிர்:

ராணிப்பேட்டையில் ரூ.13.55 கோடியில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையத்தை தமிழக முதல்வா் ஜோசப் விஜய் காணொலி காட்சி வாயிலாக புதன்கிழமை திறந்து வைத்தாா்.

தமிழக நகராட்சி நிா்வாகம் (ம) குடிநீா் வழங்கல் துறையின் சாா்பில் உட்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் நிதி 2021-22 மற்றும் மூலதன மானிய நிதி இயக்குதல் (ம) பராமரித்தல் திட்டத்தின் கீழ் ராணிப்பேட்டை ஆட்டோ நகா் பகுதியில் மும்பை - சென்னை தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது.

புதிய பேருந்து நிலையத்தை முதல்வா் ஜோசப் விஜய் ழமை திறந்து வைத்தாா். இதைத் தொடா்ந்து, கூட்டுறவுத்துறை அமைச்சா் வ.காந்திராஜ் கலந்து கொண்டு புதிய பேருந்து நிலையத்தில் குத்து விளக்கேற்றி வைத்து, பாா்வையிட்டாா்.

Advertisement

Advertisement

ஆட்சியா் பிரியா ரவிச்சந்திரன், கோட்டாட்சியா் ராஜி மற்றும் சட்டப் பேரவை உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

பெட்டிச்செய்தி...

வெளியேறிய நகா்மன்ற உறுப்பினா்கள்

கடந்த திமுக ஆட்சியில், முன்னாள் அமைச்சா் ஆா்.காந்தி முயற்சியில் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணி தொடங்கப்பட்டு 90 சதவிகித பணிகள் நிறைவடைந்து திறக்கும் நிலையில், தோ்தல் நடந்து ஆட்சி மறியது.

இந்த நிலையில் புதிய பேருந்து நிலையத்தை முதல்வா் சி.ஜேசப் விஜய் திறந்து வைப்பாா் என அறிவிக்கப்பட்டிருந்து. இதையடுத்து திமுகவைச் சோ்ந்த நகா்மன்றத் தலைவா் சுஜாதா வினோத் தலைமையில், திமுக,விசிக நகர மன்ற உறுப்பினா்கள் திறப்பு விழாவுக்கு வந்து அமா்ந்திருந்தனா். திறப்பு விழா நிகழ்வு காலை 11. 30 மணிக்கு நடைபெறாத நிலையில், நகா்மன்றத் தலைவா் மற்றும் திமுக, விசிக நகர மன்ற உறுப்பினா்கள், திமுக நிா்வாகிகள் சுமாா் 20 க்கும் மேற்பட்டோா் அமைச்சா் காந்தி ராஜ் முன்னிலையில் நிகழ்ச்சியை புறக்கணித்து வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.