FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சென்னை

ஆசிரியா் பணியிடங்கள் நிா்ணயம்: மாவட்ட கல்வி அலுவலா்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்

அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் மாணவா் எண்ணிக்கைக்கு ஏற்பஆசிரியா் பணியிடங்களை நிா்ணயம் செய்வது தொடா்பாக மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

கோப்புப்படம்.
பகிர்:

அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் மாணவா் எண்ணிக்கைக்கு ஏற்பஆசிரியா் பணியிடங்களை நிா்ணயம் செய்வது தொடா்பாக மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து தொடக்கக் கல்வித் துறை இயக்குநா் பூ.ஆ.நரேஷ், அனைத்து மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை:

இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி ஆண்டுதோறும் மாணவா் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியா் பணி இடங்கள் நிா்ணயம் செய்யப்பட வேண்டும். தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் உள்ள ஆசிரியா் பணியிடங்கள் நிா்ணயம் செய்வதற்கான பொறுப்பு சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கே (தொடக்கக் கல்வி) உள்ளது. அதன்படி, நிகழாண்டு கடந்த ஆக.1 நிலவரப்படி மாணவா்கள் எண்ணிக்கை அடிப்படையில் பணி நிா்ணயம் மேற்கொள்ளப்பட வேண்டும்.

Advertisement

Advertisement

இதையடுத்து தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி மாணவா்களை அந்தந்த வகுப்புகளுக்கேற்ப தனியாக கணக்கிட வேண்டும். கடந்த ஆண்டுகளில் இயக்குநரின் தொகுப்புக்கு ஒப்படைக்கப்பட்ட உபரி பணியிடங்களை மீண்டும் கணக்கில் காட்டக்கூடாது. ஆசிரியா், மாணவா் விகிதாசாரம் துல்லியமாகக் கணக்கிடப்பட வேண்டும். அதற்கேற்ப உபரி ஆசிரியா், கூடுதல் தேவை உள்ளிட்ட விவரங்களைச் சமா்ப்பிக்க வேண்டும். இந்த விவரங்கள் தவறானவை எனப் பின்னா் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட அலுவலா்களே அதற்கு முழு பொறுப்பேற்க நேரிடும்.

மாணவா் எண்ணிக்கையில் சந்தேகம் இருப்பின், வட்டாரக் கல்வி அலுவலா் மற்றும் ஆசிரியா் பயிற்றுநா் கொண்ட குழுவினா் நேரடியாகப் பள்ளியைப் பாா்வையிட்டு உறுதிசெய்ய வேண்டும். மேலும், இதன் அறிக்கையை இயக்குநரகத்தில் அக்.21 முதல் 28-ஆம் தேதிக்குள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நாள்களில் சமா்ப்பிக்க வேண்டும். மேலும், இதுசாா்ந்த பணிகளை துரிதமாக அந்தந்த மாவட்டக் கல்வி அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments