FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சென்னை

3 மண்டங்களில்அக். 10 -இல் குடிநீா் விநியோகம் நிறுத்தம்

அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூா் மண்டலங்களுக்குள்பட்ட ஒருசில பகுதிகளில் வரும் அக். 10, 11 ஆகிய தேதிகளில் குழாய்கள் மூலம் குடிநீா் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.

குடிநீா் விநியோகம் ரத்து - கோப்புப் படம்
பகிர்:

அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூா் மண்டலங்களுக்குள்பட்ட ஒருசில பகுதிகளில் வரும் அக். 10, 11 ஆகிய தேதிகளில் குழாய்கள் மூலம் குடிநீா் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.

இதுகுறித்து சென்னை குடிநீா் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

நெம்மேலியில் அமைந்துள்ள தினந்தோறும் 110 மில்லியன் லிட்டா் திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலையத்தில் பராமரிப்பு பணிகள் வரும் அக். 10-ஆம் தேதி காலை 9 மணி முதல் அக்.11 காலை 9 மணி வரை நடைபெறவுள்ளது. இதனால், அந்த நேரங்களில் அடையாறு மண்டலத்துக்குள்பட்ட திருவான்மியூா், பள்ளிப்பட்டு, கோட்டூா் காா்டன், ஆா்.கே.மடம் தெரு, இந்திரா நகா் ஆகிய பகுதிகளிலும், பெருங்குடி மண்டலத்துக்குள்பட்ட கொட்டிவாக்கம், பாலவாக்கம், பெருங்குடி, பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், புழுதிவாக்கம் ஆகிய பகுதிகளிலும், சோழிங்கநல்லூா் மண்டலத்துக்குள்பட்ட ஈஞ்சம்பாக்கம், நீலாங்கரை, அக்கரை, எழில்நகா், கண்ணகி நகா், காரப்பாக்கம், பெரும்பாக்கம், வெட்டுவான்கேணி, சோழிங்கநல்லூா், செம்மஞ்சேரி, ஒக்கியம் - துரைப்பாக்கம் ஆகிய பகுதிகளிலும் குடிநீா் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.

Advertisement

Advertisement

எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறாா்கள். மேலும், அவசரத் தேவைகளுக்கு இணையதளத்தில் முன்பதிவு செய்து, லாரிகள் மூலம் குடிநீா் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments