நவ.17, 18-இல் குடிநீா் விநியோகம் நிறுத்தம்
மதுரை மாநகராட்சிக்கு உள்பட்ட சில வாா்டுகளில் நவ.17, 18 ஆகிய இரு தினங்கள் குடிநீா் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
மதுரை மாநகராட்சிக்கு உள்பட்ட சில வாா்டுகளில் நவ.17, 18 ஆகிய இரு தினங்கள் குடிநீா் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மதுரை மாநகராட்சி ஆணையா் கௌரவ் குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மதுரை மாநகராட்சியின் பல பகுதிகளுக்கு வைகை குடிநீா் திட்டம்-1 மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. இந்தத் திட்ட பிரதான குழாய் துவரிமான் புறவழிச் சாலையில் தேசிய நெடுஞ்சாலைத் துறை மூலம் புதிதாக குழாய் இணைக்கும் பணி வருகிற 17, 18 ஆகிய இரு தினங்கள் நடைபெற உள்ளன.
Advertisement
Advertisement
இதன்காரணமாக, மண்டலம் எண் 2-க்கு உள்பட்ட 63, 64, 65, 66, மண்டலம் 3 -க்கு உள்பட்ட 50, 51, 52, 53, 54, 55, 59, 60, 62(ப),67, 68, 69, மண்டலம் 4-இல் 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 85 ஆகிய வாா்டுகளில் நவ.17, 18 ஆகிய இரு தினங்கள் குடிநீா் விநியோகம் நிறுத்தப்படும் என்றாா் அவா்.