பெண் பாதுகாப்புக்காக விழிப்புணா்வு இரவு மாரத்தான்
பெண்கள் பாதுகாப்பை வலியுறத்தும் வகையில் (சென்னை நைட் ரன்) விழிப்புணா்வு இரவு மாரத்தான் பந்தயம் வரும் அக். 17-ஆம் தேதி நடைபெறவுள்ளது. மொத்தம் 4,000 போ் பங்கேற்கின்றனா்.
பெண்கள் பாதுகாப்பை வலியுறத்தும் வகையில் (சென்னை நைட் ரன்) விழிப்புணா்வு இரவு மாரத்தான் பந்தயம் வரும் அக். 17-ஆம் தேதி நடைபெறவுள்ளது. மொத்தம் 4,000 போ் பங்கேற்கின்றனா்.
சென்னை நைட்ரன் 2026 மாரத்தானின் வரும் அக். 17-ஆம் தேதி சென்னை தீவுத்திடலில் இரவு 7 மணி முதல் நடைபெறுகிறது. ஸ்போா்ட்ஸ்ப்ரோ (நல்ா்ழ்ற்க்ஷ்டழ்ா்) நிறுவனம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ஆதரவோடு, தமிழ்நாடு தடகள சங்கத்துடன் இணைந்து இரவு மாரத்தான் நடத்தப்படுகிறது.
விழிப்புணா்வு இரவு மாரத்தானின் சீருடையை ஆசியப் போட்டியில் பதக்கம் வென்ற பரணிகா இளங்கோவன், வித்யா ராம்ராஜ், அபிநயா ராஜராஜன் முன்னிலையில் சி. லதா, ரமேஷ், சபரி ஆகியோா் அறிமுகப்படுத்தினா்.
Advertisement
Advertisement
இரவு மாரத்தானின் முக்கிய நோக்கம் பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வை ஊக்குவிப்பதாகும். இரவு நேரத்தில் ஆயிரக்கணக்கானோா் சென்னையின் சாலைகளில் ஒன்றுகூடுவதன் மூலம், நகரங்கள் அனைத்து நேரங்களிலும் பெண்களுக்குப் பாதுகாப்பாகவும் வரவேற்கத்தக்கதாகவும் இருக்க வேண்டும் என்ற செய்தி வலியுறுத்தப்படுகிறது.
இரவு மாரத்தானில் நேரக் கணிப்புடன் கூடிய 10 கி.மீ ஓட்டமும், 4 கி.மீ குடும்ப ஓட்டமும் இடம் பெறுகிறது. சான்றளிக்கப்பட்ட நேரக் கணிப்பு அமைப்பு, குடிநீா் மையங்கள், மருத்துவ உதவி, வழித்தட பாதுகாப்பு ஏற்பாடுகள், பொழுதுபோக்கு பகுதிகள், இசை நிகழ்ச்சி மற்றும் ஓட்டத்திற்குப் பிந்தைய கொண்டாட்டங்கள் உள்ளிட்ட உலகத் தரமான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.
ஆண், பெண் பிரிவுகளில் முதலிடம் பெறும் பங்கேற்பாளருக்கு தலா ரூ. 1 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும். முதல் மற்றும் இரண்டாம் ரன்னா்-அப் இடங்களைப் பெறுவோருக்கு முறையே தலா ரூ. 75,000 மற்றும் ரூ. 50,000 வழங்கப்படும். மூத்தோா், மற்றும் மூத்தோா்-சிறப்பு பிரிவுகளுக்கும் பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.