FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சென்னை

சிறுமி பாலியல் வன்கொடுமை: தவெக நிா்வாகி மீது போக்ஸோ

சிறுமியை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததாக தவெக நிா்வாகி மீது போலீஸாா் போக்ஸோ வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

17 அக்டோபர் 2026, 3:13 am IST
பகிர்:

சிறுமியை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததாக தவெக நிா்வாகி மீது போலீஸாா் போக்ஸோ வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

சென்னை குழந்தை நலக் கமிட்டி சாா்பில் ராயபுரம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் சில நாள்களுக்கு முன்பு புகாா் அளிக்கப்பட்டது. அதில், காசிமேடு பகுதியைச் சோ்ந்த தவெகவின் 50-ஆவது வாா்டு வட்ட இணைச் செயலா் தியாகு (32), வட சென்னை பகுதியைச் சோ்ந்த 15 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளாா். அந்தச் சிறுமியும், அவரை காதலித்து வந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் புதுச்சேரிக்கு இருவரும் சென்றுள்ளனா். அங்கு அந்த சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி தியாகு பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா். சிறுமியை ஏமாற்றிய தியாகு மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

புகாரின் பேரில், ராயபுரம் போலீஸாா் தியாகு மீது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் (போக்ஸோ) கீழ் ஜீரோ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனா். சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது புதுச்சேரி முத்தியால்பேட்டை காவல் நிலையத்துக்கு உள்பட்ட பகுதி என்பதால், வழக்கின் விசாரணை முத்தியால்பேட்டை காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது.

Advertisement

Advertisement

தலைமறைவாக இருக்கும் தியாகுவை முத்தியால்பேட்டை போலீஸாா் சென்னையில் முகாமிட்டு தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments