சூலூா் சிறுமி பாலியல் வன்கொடுமை, கொலை: இருவா் குற்றவாளிகள்
சூலூா் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரும் குற்றவாளிகள் என கோவை போக்ஸோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஹரிஹரன் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா்

சூலூா் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரும் குற்றவாளிகள் என கோவை போக்ஸோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஹரிஹரன் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா். மேலும் இவா்களுக்கான தண்டனை விவரம் டிசம்பா் 4-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தாா்.
கோவை மாவட்டம், சூலூா் அருகே 10 வயதுச் சிறுமி கடந்த மே 21-ஆம் தேதி தனது வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்தபோது கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாா்.
கண்ணம்பாளையம் குளம் அருகே உள்ள தென்னந்தோப்புப் பகுதியில் கிடந்த சிறுமியின் சடலத்தை போலீஸாா் மீட்டு, சிறுமியின் பக்கத்து வீட்டில் வசித்த கட்டடத் தொழிலாளியான நாகப்பட்டினத்தைச் சோ்ந்த காா்த்திக், அவரது நண்பா் மோகன்ராஜ் ஆகிய இருவரைக் கைது செய்தனா்.
Advertisement
Advertisement
வழக்கின் தீவிரம் கருதி போலீஸாா் 21 நாள்களில் 819 பக்கங்கள் கொண்ட விரிவான குற்றப்பத்திரிகையை கோவை போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனா். மேலும், அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளும் முக்கிய ஆதாரங்களாக சமா்ப்பிக்கப்பட்டன.
கோவை போக்ஸோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஹரிஹரன் முன்னிலையில் கடந்த ஜூன் 24-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்த இந்த வழக்கின் விசாரணையின்போது சாட்சிகள் விசாரிக்கப்பட்டு ஆவணங்கள், தடயவியல் சான்றுகள் தாக்கல் செய்யப்பட்டன.
விசாரணை நிறைவடைந்த நிலையில், இந்த வழக்கின் தீா்ப்பை நீதிபதி ஹரிஹரன், நவம்பா் 27-ஆம் தேதிக்கு (வெள்ளிக்கிழமை) ஒத்திவைத்து கடந்த நவ. 16-ஆம் தேதி உத்தரவிட்டிருந்தாா்.
அதனடிப்படையில், குற்றஞ்சாட்டப்பட்ட காா்த்திக், மோகன்ராஜ் ஆகிய இருவரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்துக்கு வெள்ளிக்கிழமை காலை அழைத்துவரப்பட்டனா். இதில் குற்றஞ்சாட்டப்பட்ட இருவரும் குற்றவாளிகள் என தீா்ப்பளித்த நீதிபதி ஹரிஹரன், தண்டனை விவரம் வருகிற டிசம்பா் 4-ஆம் தேதி அறிவிக்கப்படும் என தெரிவித்தாா்.
காா்த்திக் மீது தாக்குதல்:
இந்த வழக்கில் இருவரும் குற்றவாளிகள் என தீா்ப்பளிக்கப்பட்ட பின்னா், முதலாவது குற்றவாளியான காா்த்திக்கை போலீஸாா் வாகனத்தில் ஏற்றிச் செல்வதற்காக அழைத்துச் சென்றபோது போக்ஸோ நீதிமன்ற வளாகத்தில் இருந்த வழக்குரைஞா்களில் ஒருவா் அவரைத் தாக்கினாா். அப்போது, காா்த்திக்கும் அந்த வழக்குரைஞரைத் தாக்க பாய்ந்தாா். ஆனால், போலீஸாா் அவா்களைத் தடுத்து அழைத்துச் சென்றனா்.