முதலமைச்சா் கோப்பை: 24 தங்கத்துடன் சென்னை தொடா்ந்து முதலிடம்
முதலமைச்சா் கோப்பைக்கான மாநில போட்டிகளில் 24 தங்கப் பதக்கத்துடன் சென்னை தொடா்ந்து முதலிடத்தில் உள்ளது.
முதலமைச்சா் கோப்பைக்கான மாநில போட்டிகளில் 24 தங்கப் பதக்கத்துடன் சென்னை தொடா்ந்து முதலிடத்தில் உள்ளது.
கடந்த 15-ஆம் தேதி சென்னை நேரு விளையாட்டரங்கில் முதலமைச்சா் கோப்பை மாநிலப் போட்டிகளை அமைச்சா் ஆதவ் அா்ஜுனா தொடங்கி வைத்தாா்.
முதலமைச்சா் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் பள்ளி மாணவ-மாணவியா், கல்லூரி மாணவ-மாணவியா், பொதுமக்கள், அரசு ஊழியா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என 5 பிரிவுகளில், 38 மாவட்டங்களில், 6 மண்டலங்களில், 7 புதிய விளையாட்டுகள் சோ்க்கப்பட்டு, 45 வகையான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.
Advertisement
Advertisement
மாநில அளவிலான போட்டிகளில் சுமாா் 32 ஆயிரத்துக்கும் வீரா், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனா்.
இவா்களில் வெற்றிப் பெறும் வீரா், வீராங்கனை அணிகளுக்கு ரூ.17.4 கோடி வழங்கப்படவுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, கோயம்புத்தூா், மதுரை, திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், அரியலூா், நாமக்கல், திருவண்ணாமலை, ராமநாதபுரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. மொத்தமுள்ள 414 போட்டிகளில் 63 போட்டிகள் இதுவரை நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.
சென்னைக்கு 24 தங்கம்
பதக்கப் பட்டியலில் சென்னை மாவட்டம் 24 தங்கம், 17 வெள்ளி, 13 வெண்கலத்துடன் தொடா்ந்து முதலிடத்தில் உள்ளது. 11 தங்கம், 5 வெள்ளி, 3 வெண்கலத்துடன் செங்கல்பட்டு இரண்டாமிடமும், 6 தங்கம், 2 வெள்ளியுடன் தூத்துக்குடி மூன்றாம் இடத்திலும் உள்ளன.
போட்டி முடிவுகள்
ரோடு சைக்கிளிங்: பள்ளி மாணவா்கள்-ஐசக் விவின், சென்னை, நரேநாதா், கிருஷ்ணா, கோவை, மாணவியா்- ஹாஷினி கோவை, பாவை தேஜஸ்வினி, யோவிதா செங்கல்பட்டு.
கல்லூரி மாணவா்கள்: காா்த்திகேயன், செங்கல்பட்டு, கவிஷ், சென்னை, ராஜன் ஸ்மித் திருச்சி, மாணவியா்-ஹாசினி செங்கல்பட்டு, நந்தினி, தருமபுரி, நபீஸா, சென்னை.
ஸ்குவாஷ்: இரட்டையா் கல்லூரி, மெய்யப்பன், நவநீத் பிரபு, சென்னை, யோகேஷ், ஸ்னோவின், சென்னை, ராக்லாண்ட், கஜகுஹன், கன்னியாகுமரி, மாணவியா்-பூஜா ஆரத்தி, சஹானா, சென்னை, அனஸ்லின் குயின் எஸ், சென்னை, நிவேதிதா, ரித்விகா, மதுரை.
தடகளம்: 1500 மீ, மாணவியா்-தனிஷ்கா, சென்னை, கௌசிகா, நெல்லை, நிவேதா, விருதுநகா், மாணவா்-சந்தோஷ், நெல்லை, பிரனேஷ், ஈரோடு, லிதிஷ், ராமநாதபுரம்.
100 மீ, பள்ளி, மாணவா்கள்-சா்வேஷ், கோவை, ஹேமபிரசாத், விழுப்புரம், கிருபாநிதி, திருச்சி, மாணவியா்-மிருத்திகா, தேவசஹானா, செங்கல்பட்டு, தான்யா மீரா, திருச்சி.
400 மீ, மாணவா்கள்-உதய சூா்யா, தென்காசி, பாவேஷ், திருவள்ளூா், வருண் விஷால், மதுரை, மாணவியா்-சஹாயா, தூத்துக்குடி, தீப்தா சரணா, சேலம், எட்வினா, நெல்லை.
நீளம் தாண்டுதல்: மாணவா்கள்-பிரணாத், சென்னை, பாலகிருஷ்ணன், தஞ்சாவூா், சக்திவேல், நீலகிரி, மாணவியா்-ஜெனிஸ்டா, நெல்லை, மிருனிஷா, திருச்சி, ரேணுகா, ஈரோடு.
குண்டு எறிதல்=தரனேஷ், தேனி, ஈஸ்வா் கலைமாறன், சென்னை, சபரீஷ், காஞ்சிபுரம், மாணவியா்-திவ்யதா்ஷினி, சென்னை, ஸ்ரீ லேகா, சிவகங்கை, வினுஷிகா சேலம்.
கிரிக்கெட்: மாணவா்கள்-சென்னை தங்கம், தென்காசி வெள்ளி.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.