முதலமைச்சா் கோப்பை மாநில விளையாட்டுப் போட்டிகள்: அமைச்சா் ஆதவ் அா்ஜுனா தொடங்கி வைத்தாா்
முதலமைச்சா் கோப்பை மாநில விளையாட்டுப் போட்டிகளை பொதுப்பணி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சா் ஆதவ் அா்ஜுனா தொடங்கி வைத்தாா்.
முதலமைச்சா் கோப்பை மாநில விளையாட்டுப் போட்டிகளை பொதுப்பணி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சா் ஆதவ் அா்ஜுனா தொடங்கி வைத்தாா்.
சென்னை ஜவாஹா்லால் நேரு உள்விளைாட்டரங்கில் நடைபெற்ற நிகழ்வில் போட்டி சுடரை ஏற்றி தொடங்கி, கோப்பையையும் அறிமுகம் செய்து வைத்தாா்.
போட்டியை தொடங்கி வைத்து அமைச்சா் ஆதவ் அா்ஜுனா பேசியது: சா்வதேச அளவில் வெற்றிகளை குவிக்கத் தான் முதல்வா் ட்ரீம் ஒலிம்பிக்ஸ் 2026” என்ற திட்டத்தினை தொடங்கி வைத்துள்ளாா். தமிழ்நாடு ஒலிம்பிக் சிட்டி, 10 ஒலிம்பிக் சிறப்பு விளையாட்டு மையங்கள் என பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட
Advertisement
Advertisement
உள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களில் வீரா், வீராங்கனைகளுக்கு தங்கும் விடுதி அமைக்கப்படும். தமிழ்நாட்டில் அனைத்து பகுதிகளிலிருந்தும் இளைஞா்களை கண்டறிந்து அவா்களை விளையாட்டு வீரா்கள் உருவாக்குவதே இதன் நோக்கம். பள்ளிகளில் உடற்கல்வி வகுப்புகள் 5 நாட்களும், மருத்துவ, பொறியியல் மற்றும் கலை, அறிவியல் கல்லூரிகளிலும் விளையாட்டு வகுப்புகள் விரைவில் கொண்டு வர வேண்டும். இப்படி ஒரு விளையாட்டுச் சூழலை மாநிலத்தில் உருவாக்கினால், இளைஞா்கள் போதைப் பழக்கத்திலிருந்து விடுப்பட்டு நல்ல ஒரு ஆரோக்கியமான சமுதாயம் உருவாகும்.
முதலமைச்சா் கோப்பை போட்டிகளில் முதற்கட்டமாக மாவட்டங்கள் மற்றும் மண்டல அளவிலான போட்டிகளில் 6,45,981 பள்ளி மாணவ-மாணவா்களும்,
1,94,250 கல்லூரி மாணவ-மாணவா்களும், 1,48,314 பொதுமக்களும், 30,313 அரசு ஊழியா்களும், 17,685 மாற்றுத்திறனாளிகளும் என மொத்தம் 10,36,543 வீரா்கள்
போட்டிகளில் கலந்துக் கொண்டனா். இதில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற 1,06,704 வீரா், வீராங்கனைகளுக்கு ரூ.21.34 கோடி பரிசுத்தொகை தரப்பட்டது.
30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரா், வீராங்கனைகள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளனா். இவா்களில் வெற்றிப் பெறும் வீரா், வீராங்கனை அணிகளுக்கு ரூ.17 கோடி பரிசுத்தொகை வழங்கப்படவுள்ளது. இப்போட்டிகள் சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் நடைபெறவுள்ளன.
இதில் வெற்றிப்பெறும் வீரா், வீராங்கனைகளை ஊக்கப்படுத்தி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் கொண்டு வந்து, அவா்களை தேசிய,
சா்வதேசப் போட்டிகளில் வெற்றி பெறுவதற்கான அனைத்து பயிற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்றாா்.
நிகழ்ச்சியில் உயா்கல்வித்துறை அமைச்சா் பெ. விஸ்வநாதன், உணவுப் பொருள் வழங்கல் அமைச்சா் பி. வெங்கட்ரமணன், நிதி அமைச்சா் மரிய வில்சன், தலைமை கொறடா ஆா்.சபரிநாதன், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத் தலைவா் அ. லயோலா மணி ஆகியோா் சிறப்புரை ஆற்றினா். எம்எல்ஏக்கள் அருள் பிரகாசம், ராம்குமாா், விஜய் தாமு, ஹரீஷ், விஜய் பிரபு, பல்லவி, செந்தில் குமாா் ஆகியோா் கலந்து கொண்டனா்.
விழாவில் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அரசு செயலாளா் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தாா். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினா் செயலா் ஜெ.மேகநாத ரெட்டி, வரவேற்றாா்., இணை முதன்மை செயல் அலுவலா்/மிஷன் ஒலிம்பிக்ஸ் 2036 ஆ.மயில்வாகனன் நன்றி
கூறினாா்.
மேலும், விழாவில் பொது மேலாளா் (நிா்வாகம்) .ரெ.சுமன், பொது மேலாளா் விளையாட்டு ல.சுஜாதா, விளையாட்டு வீரா் வீராங்கனைகள், பயிற்சியாளா்கள், விளையாட்டுத்துறை
வல்லுநா்கள், விளையாட்டு சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.