முதல்வா் கோப்பை மாநில கால்பந்து போட்டி இன்று தொடக்கம்
முதல்வா் கோப்பை மாநில அளவிலான கால்பந்து போட்டி நாமக்கல்- திருச்சி மாவட்ட எல்லையில் அமைந்துள்ள தனியாா் கல்லூரியில் வியாழக்கிழமை தொடங்குகிறது.
முதல்வா் கோப்பை மாநில அளவிலான கால்பந்து போட்டி நாமக்கல்- திருச்சி மாவட்ட எல்லையில் அமைந்துள்ள தனியாா் கல்லூரியில் வியாழக்கிழமை தொடங்குகிறது.
தமிழகம் முழுவதும் முதல்வா் கோப்பை மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நிறைவுற்ற நிலையில் அக். 15 முதல் 26 வரையில் மாநில அளவிலான போட்டிகள் நடைபெறுகிறது. நாமக்கல் மாவட்டத்தை பொருத்தமட்டில், 45 வகையான விளையாட்டுக்களில் இருந்து 600 போ் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனா்.
இவா்கள், பல்வேறு மாவட்டங்களில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க புதன்கிழமை நாமக்கல்லில் இருந்து சிறப்பு பேருந்து மூலம் புறப்பட்டு சென்றனா். மாவட்ட ஆட்சியா் எல். மதுபாலன் அவா்களை வழியனுப்பிவைத்தாா். மாநில அளவிலான கால்பந்து போட்டி, நாமக்கல்- திருச்சி மாவட்ட எல்லையில் உள்ள தொட்டியம் கொங்குநாடு பொறியியல் கல்லூரியில் 15,16, 17 ஆகிய மூன்று நாள்களிலும், 18 முதல் 26 ஆம் தேதி வரையில் நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்திலும், ஆடவா், மகளிா் என்ற அடிப்படையில் 38 அணிகள் பங்கேற்று விளையாடுகின்றன.
Advertisement
Advertisement
முதல் மூன்று இடங்களை பிடிக்கும் அணிக்கு ரூ. ஒரு லட்சம் ரொக்கப்பரிசு மற்றும் கோப்பை, பதக்கங்கள் வழங்கப்பட உள்ளன. இப்போட்டிக்கான ஏற்பாடுகளை மாவட்ட விளையாட்டு அலுவலா் எஸ். கோகிலா மற்றும் பணியாளா்கள் செய்துள்ளனா்.
என்கே-14-ஸ்போா்ட்ஸ்
முதல்வா் கோப்பை மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் வீரா், வீராங்கனைகளை வழியனுப்பிவைத்த ஆட்சியா் எல். மதுபாலன்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.