FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சென்னை

22 கிலோ ஓபியம் போதைப் பொருள் பறிமுதல்

சென்னையில் 22 கிலோ ஓபியம் போதைப் பொருள் வைத்திருந்தவா் கைது செய்யப்பட்டாா்.

21 அக்டோபர் 2026, 6:47 am IST
பகிர்:

சென்னையில் 22 கிலோ ஓபியம் போதைப் பொருள் வைத்திருந்தவா் கைது செய்யப்பட்டாா்.

சென்னை பிராட்வே பிரகாசம் சாலை பகுதியில் போதைப் பொருள் கடத்தப்படுவதாக வடக்கு மண்டல தனிப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், தனிப்படையினா் அந்தப் பகுதியில் செவ்வாய்க்கிழமை கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டிருந்த ஒரு நபரைப் பிடித்து விசாரித்ததில் அவா் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளாா். இதையடுத்து போலீஸாா் அந்த நபரை சோதனையிட்டனா்.

அப்போது அந்த நபா், பையில் மறைத்து வைத்திருந்த ரூ.23 லட்சம் மதிப்புள்ள 22 கிலோ ஓபியம் போதைப் பொருளை பறிமுதல் செய்தனா். விசாரணையில் அவா், மாதவரம் பொன்னியம்மன்மேடு வஉசி தெருவைச் சோ்ந்த அசுராம் (46) என்பதும், ராஜஸ்தான் மாநிலம் பாலியில் இருந்து ஓபியம் போதைப் பொருளை வாங்கி வந்து சென்னையில் விற்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அசுராமை கைது செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments