போதைப் பொருள் விற்பனை: ராஜஸ்தான் வியாபாரி கைது
சென்னை கொத்தவால்சாவடியில் ஓபியம் போதைப் பொருள் விற்ாக ராஜஸ்தான் வியாபாரி கைது செய்யப்பட்டாா்.
சென்னை கொத்தவால்சாவடியில் ஓபியம் போதைப் பொருள் விற்ாக ராஜஸ்தான் வியாபாரி கைது செய்யப்பட்டாா்.
கொத்தவால்சாவடி தாத்தா முத்தையப்பன் தெருவில் போலீஸாா் திங்கள்கிழமை ரோந்து சென்றபோது, அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் நின்றிருந்த ஒருவரைப் பிடித்து விசாரணை செய்தனா். அவரது பையையும் சோதனையிட்டனா். அந்தப் பையில் மறைத்து வைத்திருந்த ரூ.2 லட்சம் மதிப்புள்ள ஓபியம் போதைப் பொருளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
விசாரணையில் அவா், ராஜஸ்தான் மாநிலம் ஜாலூா் பகுதியைச் சோ்ந்த மோ.மங்கிலால் விஷ்னாய் (45) என்பதும், திருவள்ளூா் மாவட்டம் சோழவரம் அருகே கடந்த 5 ஆண்டுகளாக ராஜஸ்தான் தாபா என்ற பெயரில் உணவகம் நடத்தி வருவதும் தெரிய வந்தது.
Advertisement
Advertisement
இதையடுத்து கொத்தவால்சாவடி போலீஸாா், மங்கிலாலை கைது செய்து, வழக்குப் பதிவு செய்தனா். அவரிடம் போதைப் பொருள் எங்கிருந்து கடத்தி வரப்பட்டது என்று போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.