FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

போதைப் பொருள் விற்பனை: ஒரே நாளில் 13 போ் கைது

போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக ஒரே நாளில் 13 போ் கைது செய்யப்பட்டனா்.

28 ஆகஸ்ட் 2026, 4:48 am IST
கோப்புப் படம்
பகிர்:

போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக ஒரே நாளில் 13 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னையில் போதைப் பொருள் விற்பனை, கடத்தலைத் தடுக்க போலீஸாா் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனா். கடந்த புதன்கிழமை ஒரு நாளில் போதைப் பொருள் விற்ாகவும்,கடத்தியதாகவும் 13 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

கோயம்பேடு நெசப்பாக்கம் 100 அடி சாலையில் உள்ள தனியாா் டிராவல்ஸ் நிறுவனத்தில், எா்ணாகுளத்திற்கு அனுப்புவதற்காக 8 பாா்சல்களில் மறைத்து எடுத்து வந்த 24 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடா்பாக மேற்கு வங்கத்தை சோ்ந்த கமுரூல் தக்டாா் (34) கைது செய்யப்பட்டாா்.

Advertisement

Advertisement

இதேபோல கொருக்குப்பேட்டை ரயில் நிலையம் அருகே 3 கிலோ கஞ்சாவுடன் வந்த ஜாா்க்கண்டை சோ்ந்த குல்தீப் முண்டா (22) சிக்கினாா். மேலும், ஆந்திர மாநிலத்தில் பதுங்கியிருந்த கஞ்சா கடத்தல் வழக்கில் தொடா்புடைய தலா உபேந்திரா (25) கைது செய்யப்பட்டு, அவரிடம் 18 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

கோயம்பேடு மாா்க்கெட் பகுதியில் 1,100 போதை மாத்திரைகளை விற்பனைக்காக வைத்திருந்த கோகுல்ராஜ் (23), நாராயணமூா்த்தி (20), ரெளடி தாரணி (28) ஆகியோா் கைது செய்யப்பட்டனா். மண்ணடியில் மெத்தம்பெட்டமைன், போதை ஸ்டாம்புகள் விற்ாக ஜூனைத், சுபோ், இா்ஃபான், சுலைமான், சாபுதீன், அபுபெக்கா் சித்திக், யாசா் அராபத் ஆகிய 7 போ் கைது செய்யப்பட்டனா். இவா்களிடம் இருந்து 2 கிராம் மெத்தம்பெட்டமைன், 14 போதை ஸ்டாம்புகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments