FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

விளக்கில் தீபம் ஏற்றியபோது தீ விபத்து: காயமடைந்த பெண் உயிரிழப்பு

சென்னை பட்டினப்பாக்கத்தில் விளக்கில் தீபம் ஏற்றியபோது ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த பெண் உயிரிழந்தாா்.

2 செப்டம்பர் 2026, 4:13 am IST
பலி
பகிர்:

சென்னை பட்டினப்பாக்கத்தில் விளக்கில் தீபம் ஏற்றியபோது ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த பெண் உயிரிழந்தாா்.

பட்டினப்பாக்கம் கற்பகம் அவென்யூ பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவா் மாதவி (62). இவா், கடந்த 25-ஆம் தேதி வீட்டு பூஜை அறையில் விளக்கு ஏற்றியபோது சேலையில் தீப்பிடித்தது. மாதவி அலறல் சப்ததைக் கேட்டு, அவரது குடும்பத்தினா் அங்கு ஓடி வந்து அவரை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த மாதவி, செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து பட்டினப்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments