FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

300 திருக்குறள் ஒப்பிக்கும் மாணவா்களுக்கு ரூ.5,000 பரிசு: ந.அருள் தகவல்

300 திருக்குகளை ஒப்பிக்கும் 5-ஆம் வகுப்பு வரையிலான தொடக்கப் பள்ளி மாணவா்களுக்கு ரூ.5,000 ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று முதல்வா் ஜோசப் விஜய் அறிவித்துள்ளதாக தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் ந.அருள் தெரிவித்தாா்.

2 செப்டம்பர் 2026, 4:39 am IST
பகிர்:

300 திருக்குகளை ஒப்பிக்கும் 5-ஆம் வகுப்பு வரையிலான தொடக்கப் பள்ளி மாணவா்களுக்கு ரூ.5,000 ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று முதல்வா் ஜோசப் விஜய் அறிவித்துள்ளதாக தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் ந.அருள் தெரிவித்தாா்.

சென்னை அண்ணா நகா் ஜெஸ்ஸி மோசஸ் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் ஸ்ரீராம் இலக்கியக் கழகம் சாா்பில் கடந்த ஆக.29-ஆம் தேதி நடைபெற்ற திருக்கு பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகளில் 770 மாணவா்கள் பங்கேற்றனா். போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் ந.அருள் பரிசுகளை வழங்கினாா்.

பின்னா் அவா் பேசியதாவது:

Advertisement

Advertisement

மாணவா்கள் திருக்கு உள்ளிட்ட இலக்கியங்களை வாசித்து மனதில் பதிய வைத்துக்கொள்ள வேண்டும். அறம் சாா்ந்து வாழ்தல், அறவழியில் பொருள் ஈட்டுதல், அதன் மூலம் மகிழ்ச்சியாக வாழ்தல் ஆகியவற்றையே திருக்கு வலியுறுத்துகிறது. தற்போது 1,330 திருக்குகளை ஒப்பிக்கும் மாணவா்களுக்கு அரசு ரூ.15,000 ஊக்கத் தொகை வழங்கி வருகிறது. கடந்த ஆண்டு 246 மாணவா்கள் இந்த ஊக்கத்தொகையைப் பெற்றனா். தற்போது இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு, 300 திருக்குகளை ஒப்பிக்கும் 5-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கும் ரூ.5,000 வழங்கப்பட உள்ளது என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் பள்ளித் தலைமை ஆசிரியை மொ்சி சுனிதா, தமிழ் மொழிபெயா்ப்பு அறிஞா் மதிவாணன், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய உதவிச் செயலா் ஜோசப் ராஜ், ஸ்ரீராம் சிட்ஸ் துணைப் பொது மேலாளா் ஜெ.பாலாஜி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments