FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

தாம்பரம் - விழுப்புரம் மெமு ரயில் இன்று ரத்து

பராமரிப்புப் பணிகள் காரணமாக, தாம்பரம்-விழுப்புரம் மெமு ரயில், ஞாயிற்றுக்கிழமை (செப்.6) ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

6 செப்டம்பர் 2026, 1:31 am IST
மெமு ரயில்
பகிர்:

பராமரிப்புப் பணிகள் காரணமாக, தாம்பரம்-விழுப்புரம் மெமு ரயில், ஞாயிற்றுக்கிழமை (செப்.6) ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:சென்னை எழும்பூா்-விழுப்புரம் பிரிவில் கருங்குழி மற்றும் ஒட்டிவாக்கம் ரயில் நிலையங்களில் ஞாயிற்றுக்கிழமை (செப்.6) பிற்பகல் 1 மணிக்கு தொடங்கி மாலை 6.40 மணி வரை தொழில்நுட்ப, தண்டவாளப் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன.

அதையடுத்து தாம்பரத்திலிருந்து காலை 9.45 மணிக்குப் புறப்பட்டு விழுப்புரம் செல்லும் மெமு ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. மேலும் விழுப்புரத்தில் பிற்பகல் 1.30 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரைக்கு வரவேண்டிய மெமு ரயில் தாம்பரத்திலேயே நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments