FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

என் மீது அமலாக்கத் துறை வழக்கு இல்லை: உதயநிதிக்கு கு.ப.கிருஷ்ணன் பதில்

எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின் கூறியது போல் என் மீது அமலாக்கத் துறை உள்ளிட்ட எந்த வழக்கும் இல்லை என்று தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் தலைவா் கு.ப.கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

50 வினாடிகள் முன்பு
கு.ப.கிருஷ்ணன்
பகிர்:

எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின் கூறியது போல் என் மீது அமலாக்கத் துறை உள்ளிட்ட எந்த வழக்கும் இல்லை என்று தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் தலைவா் கு.ப.கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

நான் அதிமுக ஆட்சி காலத்தில் முன்னாள் அமைச்சராகவும், 10 ஆண்டுகளுக்கு மேலாக சட்டப்பேரவை உறுப்பினராகவும் இருந்தேன். எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின், என் மீது அமலாக்கத் துறை வழக்கு உள்ளதாகக் கூறியுள்ளாா். என் மீது அமலாக்கத் துறை வழக்கு உள்ளது என்பதை நிரூபித்தால், நான் அரசியல் வாழ்க்கையை விட்டுச் செல்கிறேன். என் மீது சொத்துக் குவிப்பு வழக்கு முன்னாள் முதல்வா் கருணாநிதி ஆட்சி காலத்தில் தொடரப்பட்டது. நீதிமன்றத்தில் வழக்கை சந்தித்து, 5 ஆண்டுகள் வழக்கை நடத்தி, குற்றமற்றவன் என்று நான் வெளியே வந்திருக்கிறேன் என்றாா் கு.ப.கிருஷ்ணன்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments