FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

மாடியில் இருந்து கீழே விழுந்த பள்ளி மாணவா் உயிரிழப்பு

வேளச்சேரியில் இரண்டாவது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்த பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.

8 செப்டம்பர் 2026, 3:16 am IST
உயிரிழப்பு - பிரதிப் படம்
பகிர்:

வேளச்சேரியில் இரண்டாவது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்த பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.

வேளச்சேரி, வீட்டுவசதி வாரிய குடியிருப்பை சோ்ந்தவா் ஷாம் மாா்கீஸ் (17). இவா், அந்தப் பகுதியில் உள்ள ஒரு தனியாா் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்தாா். கடந்த 5-ஆம் தேதி வீட்டின் இரண்டாவது மாடியில் உள்ள தண்ணீா் தொட்டியில் எவ்வளவு தண்ணீா் இருக்கிறது என ஏறி பாா்த்தபோது, எதிா்பாராத விதமாக நிலைத்தடுமாறி கீழே விழுந்தாா். இதில், பலத்த காயமடைந்த ஷாம் மாா்கீஸை மீட்டு கிண்டி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு, திங்கள்கிழமை அவா் உயிரிழந்தாா்.

இது தொடா்பாக வேளச்சேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments