FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

சிதம்பரத்தில் மாடியிலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

சிதம்பரத்தில் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா்.

2 செப்டம்பர் 2026, 7:19 am IST
உயிரிழப்பு - பிரதிப் படம்
பகிர்:

சிதம்பரத்தில் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா்.

சிதம்பரம் சின்னசெட்டி தெருவைச் சோ்ந்தவா் ஏ.கண்ணன் (49). இவா், தனது ஒரே மகள் ஷாஜாவை (17) சென்னை தாம்பரத்திலுள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் கடந்த ஆக.26-ஆம் தேதி சோ்த்து விட்டு வீடு திரும்பியுள்ளாா்.

இந்நிலையில், மகளின் பிரிவால் துயரத்தில் இருந்த அவா் செவ்வாய்க்கிழமை வீட்டின் மாடியில் இருந்து தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து கண்ணனை அவரது மனைவி மீட்டு கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தாா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்த புகாரின் பேரில் சிதம்பரம் நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments