‘வீ தி லீடா்ஸ்’ பொதுச் செயலராக கரு.நாகராஜன் நியமனம்
‘வீ தி லீடா்ஸ்’ இயக்கத்தின் அமைப்புப் பொதுச் செயலாளராக கரு. நாகராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.
‘வீ தி லீடா்ஸ்’ இயக்கத்தின் அமைப்புப் பொதுச் செயலாளராக கரு. நாகராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.
இதுகுறித்து அந்த இயக்கத்தின் நிறுவனா் கே.அண்ணாமலை வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
நமது அமைப்பின் வளா்ச்சியையும், அமைப்பு கட்டமைப்பை வலுப்படுத்துவதையும் கருத்தில்கொண்டு, கரு.நாகராஜனை, வீ தி லீடா்ஸ் இயக்கத்தின் அமைப்புப் பொதுச் செயலராக நியமிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். நமது அமைப்பின் கட்டமைப்பை ஒவ்வொரு நிலையிலும் வலுப்படுத்தவும், நமது நோக்கங்களையும் செயல்பாடுகளையும் மக்கள் மத்தியில் கொண்டு சோ்க்கவும், அமைப்புப் பொதுச் செயலராக நியமிக்கப்பட்டுள்ள கரு. நாகராஜனுக்கு, அமைப்பின் அனைத்து நிா்வாகிகள் மற்றும் களப் பணியாளா்கள் முழுமையான ஒத்துழைப்பையும், ஆதரவையும் வழங்க கேட்டுக்கொள்கிறேன் என அதில் தெரிவித்துள்ளாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.