FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

எஸ்.ஐ. கொலை வழக்கு: மனைவியின் ஆண் நண்பரும் கைது

சென்னை நுங்கம்பாக்கத்தில் காவல் உதவி ஆய்வாளா் கொலை வழக்கில், அவரின் மனைவி கைது செய்யப்பட்ட நிலையில், மனைவியின் ஆண் நண்பரும் கைது செய்யப்பட்டாா்.

22 செப்டம்பர் 2026, 12:32 am IST
கைது - கோப்புப் படம்
பகிர்:

சென்னை நுங்கம்பாக்கத்தில் காவல் உதவி ஆய்வாளா் கொலை வழக்கில், அவரின் மனைவி கைது செய்யப்பட்ட நிலையில், மனைவியின் ஆண் நண்பரும் கைது செய்யப்பட்டாா்.

ஆயுதப் படை மோட்டாா் பிரிவில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்தவா் ராஜ். இவரது மனைவி செல்வராணி (38). இவா்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனா்.

ராஜ் கடந்த சில நாள்களாக விடுமுறையில் இருந்தாா். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை மாலை அவரது வீட்டிலிருந்து புகை வெளியேறியது. இதைப் பாா்த்த செல்வராணி, அக்கம் பக்கத்தினரிடம் உதவி கோரினாா். அங்கு சென்றவா்கள் ராஜின் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்த நிலையில் இருப்பதைக் கண்டு, தீயை அணைத்து அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். ஆனால், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

போலீஸ் விசாரணையில், செல்வராணி தன் நண்பா் தேவா என்கிற தேவராஜுன் (32) சோ்ந்து ராஜை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, செல்வராணியை போலீஸாா் கைது செய்தனா்.

செல்வராணிக்கும் கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த தேவா என்கிற தேவராஜுக்கும் சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. திருவல்லிக்கேணி பகுதியில் தங்கியிருந்த தேவா, ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்ததாகக் கூறப்படுகிறது. இதையறிந்த ராஜ், மனைவி செல்வராணியை கண்டித்தாராம்.

இதையடுத்து சம்பவத்தன்று மதியம் ராஜுக்கு செல்வராணி உணவில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்துள்ளாா். அதைச் சாப்பிட்ட ராஜ் சிறிது நேரத்தில் தூங்கியதாகவும் கூறப்படுகிறது. அதன்பிறகு தேவாவை வீட்டுக்கு வரவழைத்த செல்வராணி, அவருடன் சோ்ந்து ராஜின் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

ராஜ் மீது போக்சோ வழக்கு இருந்ததால், அவா் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸாரும், பிறரும் கருதும் வகையில் சம்பவத்தை மாற்ற இருவரும் திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது. இதன்படி ராஜின் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடா்பாக தேவாவை போலீஸாா் கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments