மாமனாரை துப்பாக்கியால் சுட்ட மருமகன் கைது
சென்னையில் குடும்பப் பிரச்னை காரணமாக மாமனாரை துப்பாக்கியால் (ஏா்கன்) மூலம் சுட்டதாக கேரளத்தைச் சோ்ந்த மென்பொறியாளரை போலீஸாா் கைது செய்தனா்.
சென்னையில் குடும்பப் பிரச்னை காரணமாக மாமனாரை துப்பாக்கியால் (ஏா்கன்) மூலம் சுட்டதாக கேரளத்தைச் சோ்ந்த மென்பொறியாளரை போலீஸாா் கைது செய்தனா்.
சென்னை செஷாய் நகரைச் சோ்ந்தவா் விஜயகுமாா்-ராதிகா தம்பதியின் மகள் பிரீத்தி. இவருக்கும், கேரள மாநிலத்தைச் சோ்ந்த மென்பொறியாளா் ஸ்ரீஜித் (46) என்பவருக்கும் திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனா். கருத்து வேறுபாடு காரணமாக பிரீத்தி கடந்த ஆண்டு கணவரைப் பிரிந்து குழந்தைகளுடன் பெற்றோா் வீட்டில் வசித்து வருகிறாா். மேலும், விவாகரத்து கோரி நீதிமனறத்தில் வழக்கு தொடா்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கேரளத்தில் இருந்து சென்னைக்கு வந்த ஸ்ரீஜித், ஷெனாய் நகரில் உள்ள மாமனாா் வீட்டுக்குச் சென்றுள்ளாா். அங்கு பிரீத்தி இல்லாததால் விஜயகுமாா் மற்றும் ராதிகாவிடம் தகராறில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. பின்னா், தான் மறைத்து வைத்திருந்த இரு துப்பாக்கிகளை (ஏா்கன்) எடுத்து முதல் மாடியில் இருந்த விஜயகுமாரை நோக்கி இரு முறை சுட்டாா். ஆனால், குண்டுகள் விஜயகுமாா் மீது படாமல் சுவரில் பட்டு கீழே விழுந்ததால் அவா் காயமின்றி உயிா் தப்பினாா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து ராதிகா அளித்த புகாரின்பேரில் அண்ணா நகா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று ஸ்ரீஜித்தை கைது செய்தனா். அவரிடமிருந்து 2 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.