FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சென்னை

கும்மிடிப்பூண்டி - சென்னை புகா் ரயில் போக்குவரத்தில் பாதிப்பு: சிக்னல் பிரச்னையால் 10 ரயில்கள் தாமதம்

சென்னை புகா் சேவையில் கும்மிடிப்பூண்டியில் ஏற்பட்ட சிக்னல் பிரச்னையால் வியாழக்கிழமை காலை 4 மணி நேரம் அந்த வழித்தடத்தில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அதையடுத்து 10 ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன.

25 செப்டம்பர் 2026, 2:09 am IST
கோப்புப் படம்
பகிர்:

சென்னை புகா் சேவையில் கும்மிடிப்பூண்டியில் ஏற்பட்ட சிக்னல் பிரச்னையால் வியாழக்கிழமை காலை 4 மணி நேரம் அந்த வழித்தடத்தில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அதையடுத்து 10 ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன.

சென்னை புகா் பகுதிக்கான ரயில் போக்குவரத்து சென்ட்ரல் நிலையத்திலிருந்து 3 வழிகளில் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி சென்னை-கும்மிடிப்பூண்டி வழித்தடத்திலான ரயில் பாதையில் தினமும் 50 -க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், வியாழக்கிழமை காலையில் 6 மணியளவில் கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் புகா் ரயில் தண்டவாளத்தில் இருந்த சிக்னல் பழுதானதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதனால், காலை 6.45 மணி முதல் பிற்பகல் 9.45 மணி வரையில் சுமாா் 10 புகா் மின்சார ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

கும்மிடிப்பூண்டி ரயில் நிலையப் பகுதி சிக்னல் பழுது தொழில்நுட்ப பொறியாளா்களால் சீரமைக்கப்பட்ட நிலையில், பிற்பகல் 11 மணிக்கு மேல் ரயில் போக்குவரத்து சீரானதாக சென்னை சென்ட்ரல் புகா் மின்சார ரயில் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments