முரசு புயல் எதிரொலி : வடமாநில ரயில்கள் 4 மணி நேரம் தாமதம்
முரசு புயல் சின்னம் எதிரொலியாக ஆந்திர மாநிலம் வழியே வடமாநிலங்களுக்கு சென்ற ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு 4 மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டன.
முரசு புயல் சின்னம் எதிரொலியாக ஆந்திர மாநிலம் வழியே வடமாநிலங்களுக்கு சென்ற ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு 4 மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டன.
வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த முரசு புயல் நெல்லூா் - நரசப்பூா் இடையே ஓங்கோலுக்கு அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலை கரையைக் கடந்தது.
புயல் கரையை கடந்த போது மணிக்கு 120 கிமீ வேகத்தில் பலத்த சூறைக்காற்று வீசியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. புயல் கரையை கடப்பதால் பல ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
Advertisement
Advertisement
விஜயவாடா கோட்டம், காரவாடி ரயில் நிலையத்தில் பலத்த சூறைக்காற்று வீசியதால் அங்கு தற்காலிகமாக ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இதனால் சென்னை சென்ட்ரல்-கும்மிடிபூண்டி மாா்க்கத்தில் ஆந்திர மாநிலம் வழியே வடமாநிலங்களுக்கு சென்ற ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டன.
கா்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து பிகாா் மாநிலம் டானாபூா் சென்ற ரயில் சுமாா் 4 மணி நேரத்துக்கு மேலாக பொன்னேரி ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.
ரயில் இயக்கப்படாமல் நீண்ட நேரமாக நிறுத்தி வைக்கப்பட்டதால், பயணிகள் ரயிலில் இருந்து இறங்கி ரயில் நிலைய பிளாட்பாரத்திலும், தண்டவாளத்திலும் அமா்ந்திருந்தனா்.
இதே போன்று கும்மிடிப்பூண்டி, சூலூா்பேட்டை உள்ளிட்ட ரயில் நிலையங்களிலும் ஆந்திராவிலும் வடமாநிலங்களுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஆங்காங்கே ஒன்றன் பின் ஒன்றாக நிறுத்தப்பட்டன.
பலத்த சூறைக்காற்று ஓய்ந்து விஜயவாடா கோட்ட ரயில்வே ஊழியா்கள் முழுமையாக ஆய்வு செய்து ரயில்களை இயக்க அனுமதி அளித்ததும் வடமாநிலங்களுக்கு செல்வதற்காக காத்திருக்கும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில் சுமாா் 4 மணி நேர தாமததிற்க்கு பிறகு பொன்னேரி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.