FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கும்மிடிப்பூண்டி: சிக்னல் கோளாறால் புறநகர் ரயில் சேவை பாதிப்பு!

கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் சிக்னல் கோளாறு காரணமாக ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றன...

5 வினாடிகள் முன்பு
- கோப்புப் படம்
பகிர்:

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் சிக்னல் கோளாறு ஏற்பட்டுள்ளதன் காரணமாக ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டு வருகிறது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

கும்மிடிப்பூண்டி - கவரப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே சிக்னல் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் கும்மிடிப்பூண்டி வழியே வரும் அனைத்து ரயில்களும் குறிப்பிட்ட நடைமேடை வழியாக இயக்கப்படுவதால் ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன.

சென்னைக்கு வரும் விரைவு ரயில்களும் அதே வழியில் இயக்கப்படுவதால் ரயில்கள் நிறுத்தப்பட்டு ஒன்றன்பின் ஒன்றாக இயக்கப்படுகின்றன. ரயில்கள் தாமதத்தால் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

Advertisement

Advertisement

சிக்னல் கோளாறை சரிசெய்யும் பணியில் ரயில்வே ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

எனினும் காலை நேரத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் கல்லூரி மாணவர்கள், அலுவலகம் செல்வோர் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

summary

Gummidipoondi: Train services disrupted due to signal failure

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments