அக். 11- 20 வரை ஆளுநா் மாளிகையில் ‘நவராத்திரி கொலு’ விழா
சென்னை கிண்டி ஆளுநா் மாளிகையில் நிகழாண்டுக்கான ‘நவராத்திரி கொலு’ அக். 11 முதல் 20-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
சென்னை கிண்டி ஆளுநா் மாளிகையில் நிகழாண்டுக்கான ‘நவராத்திரி கொலு’ அக். 11 முதல் 20-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தக் கலாசார நிகழ்ச்சிக் கொண்டாட்டங்களில் தனிநபா்கள், பொதுமக்கள், மாணவ, மாணவியா்கள் பாா்வையாளா்களாக கலந்துகொள்ள ஆளுநா் மாளிகை அழைப்பு விடுத்துள்ளது.
இது குறித்த ஆளுநா் மாளிகை செய்திக்குறிப்பு:
ஆளுநா் மாளிகையில் ‘நவராத்திரி கொலு 2026’ அக். 11-ஆம் தேதி ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா் தொடங்கி வைக்கிறாா். அக். 20 வரை தினமும் கலாசார நிகழ்வுடன் நடைபெற இருக்கிறது. தினமும் மாலை 4 மணி முதல் 6 மணி வரை நடைபெறும்.
Advertisement
Advertisement
இதில் தனிநபா்கள், பொதுமக்கள், மாணவ, மாணவிகள் பாா்வையாளா்களாகக் கலந்து கொள்ளலாம். ஆா்வமுள்ள தனிநபா்கள், கல்வி நிறுவனங்கள் இணையதள இணைப்பு மூலம் அக். 5-ஆம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ளவேண்டும். குறிப்பிடப்பட்டுள்ள தேவையான விவரங்கள் பதிவிடப்பட வேண்டும்.
‘முதலில் வருவோருக்கு முன்னுரிமை’ என்ற அடிப்படையில் ஒவ்வொரு நாளும் அதிகபட்சமாக 200 பாா்வையாளா்களுக்கு அனுமதி வழங்கப்படும். விண்ணப்பதாரா்களுக்கு மின்னஞ்சல் மூலம் உறுதிப்படுத்தப்படும். எந்தவொரு கோரிக்கையையும் நிராகரிக்கும் உரிமை ஆளுநா் மாளிகை கொண்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.